உயர் கல்வி சேர்க்கை : தமிழகம் முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2018

உயர் கல்வி சேர்க்கை : தமிழகம் முதலிடம்

உயர் கல்வியில் சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் சமீபத்தில் வெளியிட்டார்;
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உயர் கல்விக்கான, ஜி.இ.ஆர்., எனப்படும் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தின் அடிப்படையில், 46.9 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில், 56.1 சதவீதத்துடன் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.ஜி.இ.ஆர்., விகிதம் என்பது, 18 - 23 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில், உயர் கல்வியில் சேருவதற்கு பதிவு செய்வோரின் சதவீதம்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்களின் ஜி.இ.ஆர்., விகிதத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களின், ஜி.இ.ஆர்., விகிதத்தில் சண்டிகர், டில்லிக்கு அடுத்தபடியாக, 45.6 சதவீதத்துடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், ஜி.இ.ஆர்., விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

1 comment:

  1. தமிழ்நாட்டிற்கு என்று உள்ள மத்திய அரசு பணியில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை , கடைசியில் உள்ளது, யாருமே கண்டுக்கலயே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி