ஆதார் தனிநபர் கைவிரல் ரேகை பாதுகாப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2018

ஆதார் தனிநபர் கைவிரல் ரேகை பாதுகாப்பு

ஆதார்' பதிவேட்டில் உள்ள, தனி நபர் கைவிரல் ரேகையை பாதுகாக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும், வங்கிக் கணக்கு, அலைபேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது.
எனினும், தனிப்பட்ட விஷயங்கள், ஆதாருக்காக சேகரிக்கப்படுகின்றன. அவை கசிந்தால், பெரும்பாதிப்புகள் ஏற்படும் என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், 500 ரூபாய் கொடுத்தால், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து விபரங்களையும், சிலர் விற்பதாக புகார் எழுந்துள்ளது. அதை, அரசு மறுத்துள்ளது. ஆதாரில், 'பயோமெட்ரிக் டேட்டா' என்ற, தகவல் தொகுப்பில், தனிநபர் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. அதை, யாரேனும் போலியாக தயாரித்து, அதன் வாயிலாக பயனடைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் கிளப்பப்படுகிறது.

அதைப் போக்க, ஒரு வழி உள்ளது.ஆதார் அமைப்பின், www.uidai.gov.in என்ற, வலைதளத்திற்குள் நுழைந்ததும், 'ஆதார் சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'செக்யூர் பயோமெட்ரிக்ஸ்' என்ற வார்த்தையை பார்க்கலாம். அதன் அருகில், 'லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ்' என்ற இடத்தில், 'கிளிக்' செய்ய வேண்டும். பின், உரிய இடத்தில், ஆதார் எண்ணை பதிவிட்டால், அலைபேசிக்கு, 'பாஸ்வேர்டு' வரும். அதை பதிவிட்டால், உங்கள், பயோமெட்ரிக் கைவிரல் ரேகை, 'லாக்' ஆகிவிடும்.அதாவது, யாருமே அதை பார்க்க முடியாததாகி விடும். அதை நீங்களே கூட, எங்கும் பயன்படுத்த முடியாது. அதை, மீண்டும் செயல்படுத்த, இணையதளத்தில், அதே வழிமுறையை பின்பற்றி, 'அன்லாக்' செய்தால் மட்டுமே முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி