'புதிய பாடத்திட்டங்களுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2018

'புதிய பாடத்திட்டங்களுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில், புதிய பாடத் திட்டங்களை வகுத்துள்ளோம். இதை, வரைபடங்கள் மூலம் வெளியிட்ட போது, கல்வியாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த, தனியார் பள்ளி வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ள, பட்டம் படித்த மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் பயன் பெற, 75 ஆயிரம் மாணவ - மாணவியர்ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில், புதிய பாடத் திட்டங்களை வகுத்துள்ளோம். இதை, வரைபடங்கள் மூலம் வெளியிட்ட போது, கல்வியாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழகத்தில் உள்ள நுாலகங்கள், படிப்படியாக புனரமைக்கப்பட்டு வருகின்றன.அரசு பள்ளிகளில் பணிபுரியும், பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய முடியாது. பகுதி நேர ஆசிரியர்களின் நலன் கருதி அவர்கள் வசிக்கும், 10 கி.மீ., துாரமுள்ள பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில்,வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து, கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறோம். இது குறித்த முடிவு, விரைவில்அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி