உயர்த்தப்பட்ட அரசுப்பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2018

உயர்த்தப்பட்ட அரசுப்பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு


தமிழகத்தில் உயர்த்தப்பட்ட அரசுப்பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. சாதாரணப் பேருந்துகளில் கட்டணம் கிலோமீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், நகர மற்றும் மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விரைவுப் பேருந்துகளில் கட்டணம் கிலோமீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், குளிர்சாதனப் பேருந்துகளில் கட்டணம் கிலோமீட்டருக்கு 140 பைசாவில் இருந்து 130 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1000 மாதாந்திர பேருந்து பயண அட்டை, முதியோருக்கான கட்டணமில்லா பயண அட்டை, மாணவர்களுக்காக பேருந்து பயண சலுகை தொடர்ந்து வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. பேருந்து கட்டணக் குறைப்பு மூலம் நாளொன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்பட்டது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேனியில் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

பேருந்து கட்டண குறைப்பு போதாது, பேருந்து கட்டணம் பைசா கணக்கில் குறைத்தது சரியில்லை என துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அறிவித்தபடி நாளை போராட்டம் நடத்தப்படும் எனவும் துரைமுருகன் கூறியுள்ளார்.

11 comments:

  1. மக்களுக்கு தேவையானது எதெல்லாமோ அதெல்லாம் விலை கூடுது தமிழ்நாடுல முட்டாள் அரசே டாஸ் மார்க் ரேட்டை கூட்டு அப்பவாவது குடிமன்னர்கள் திருந்தட்டும்

    ReplyDelete
  2. Increase double charge decrease.5 paisa good

    ReplyDelete
  3. tn kurainthapatcha kattanam 5 rupaa Illada idiots 7 rupaa vaanguraanuga... first neeyelam bus la poiyu paaru Aprm vanthu pesu

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Tn arasu arivaliii...!!!bcz thangal ninatha kattanaththai vida sattru uyarthi piragu avarkal kattanaththirkku kondu vandhu niruththi irukkirarkal. (Ippadi porattam seivarkal endru ninaiththae...)

    ReplyDelete
  6. Watch all news channels our minister announced that selection list will be released with 2013 only and the trb will release within a week

    ReplyDelete
  7. Today our educational minister announced that the selection list will be released within a week and the list will carry only 2013. Good hope for 2013 pass holders of tntet

    ReplyDelete
  8. See news 7, puthiya thalaimurai, kalviseithi

    ReplyDelete
  9. 2013 social add one mark revised result eappo viduvanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி