அடுத்தடுத்து குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்; அரை மணி நேரம் முடங்கியவாட்ஸ் அப் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2018

அடுத்தடுத்து குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்; அரை மணி நேரம் முடங்கியவாட்ஸ் அப்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வாழ்த்துகள் அனுப்ப முயற்சித்ததால் சமூக வலைதள ஊடகமான வாட்ஸ் அப் சிறிது நேரம் முடங்கியது.
உலக முழுவதும் புத்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, மக்கள் ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து தங்கள் அன்பை பறிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் கோடிக்கணக்கான மக்களுக்கு குறுஞ்செய்தி தகவல்களை அனுப்ப பயன்படும் சமூக வலைதளமான 'வாட்ஸ் அப்' சுமார் அரை மணி நேரம் வரை முடங்கியது.இதன் காரணமாக புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்ப முடியாமல் வாட்ஸ் அப் பயனாளர்கள் சிறிது நேரம் தடுமாறினர்.இந்தியாவில் மட்டுமல்லாது இங்கிலாந்து, ஜப்பான், பனாமா, தென் ஆப்பிரிக்கா, கத்தார், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வாட்ஸ் அப் சிறுதுநேரம் முடங்கியது.

இதனால் பல பயனாளர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இதர சமூக வலைதளங்களில் புத்தாண்டு தினத்தன்று வழக்கம்போல் வாட்ஸ் அப் முடங்கிவிட்டது என்று தங்களது அதிருப்தியை பதிவிட்டனர்.இது குறித்து 'வாட்ஸ் அப்' நிறுவனம் அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், சர்வர் செயலிழந்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி