அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2018

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

20 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளை காரணம் காட்டி, பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிடக் கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்தமனு நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.வாதத்தின் போது, 1997ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வகுத்த விதிகளின்படி, அந்தப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட சில காரணங்கள் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டன.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், 20 ஆண்டுகளில் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டனர். அத்தியூர் திருக்கை கிராம உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 comment:

  1. நீதிபதி ஐயா,

    அதோட சேர்த்து எப்படி அடிப்படை வசதி கூட சரியாக இல்லாத தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தொடர்ந்து நடந்த அனுமதிக்கின்றீர்கள்?????????? என்று இதையும் கேளுங்கள்.
    மேலும்,
    வாங்கும் கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் பள்ளியின் கட்டமைப்பு வசதிக்கு ஒழுங்காக செலுசெய்கின்றனவா என்பதை, வருடா வருடம் கணக்கு வெளிப்படையாக பள்ளியில் ஒட்ட வேண்டும் என்று உத்த விடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி