அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் சேவை மையங்கள் இனி கிடையாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2018

அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் சேவை மையங்கள் இனி கிடையாது

அரசுத் தேர்வுகள் துறையை முழுவதும் கணினிமயமாக்க அரசு நிதி ₹2.71 கோடி ஒதுக்கியுள்ளதால் சேவை மையங்கள் மூடப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் நேரடியாகஆன்லைன் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர் பிரச்னை இல்லாமல் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.அங்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

தற்போது வரை அந்த சேவை மையங்கள் மூலம்தான் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்த பிறகு தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கவும் இந்த சேவை மையங்கள் பயன்பட்டு வந்தன. சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் கட்டணம் ₹50 வசூலிக்கப்படுகிறது. அதில் ₹20 அரசுத் தேர்வுத்துறையின் கணக்கில் வரும். மீதம் உள்ள தொகை சேவை மைய செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த மானியக் கோரிக்கையில் வெளியிட்ட அறிவிப்புகளின்படி தேர்வுத்துறையை கணினி மயமாக்க ₹2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி தேர்வுத்துறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட உள்ளது. அதற்கு பிறகு தேர்வுத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும்ஆன்லைன் மூலமே நடக்கும். அதனால் மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறையின் சேவை மையங்களை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

தேர்வு எழுதுவோர் பள்ளி மாணவர்களாக இருந்தாலும், தனித் தேர்வர்களாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. அடுத்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பானஅரசாணைகள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி