Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

EMIS ஆல் தூக்கம் தொலைந்து மனநோயாளியாகப் போகும் தலைமையாசிரியர்கள்- அரசு பள்ளி ஆசிரியர்களின் ஆதங்கம் !

 EMIS இது யாருடைய வேலை ?

தொடக்கப்பள்ளிகளுக்கு கணினி இல்லை இ‌‌ணையதள வசதி கிடையாது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி கிடையாது. ஆனால் இந்த பணியை மாணவர் புகைப் படத்துடன் இனணயத்தில் பதிவுசெய்ய வேண்டும்.


தமிழகம் முழுவதும்  கோடிக் கணக்கான மாணவர்களை புகைப்படத்துடன் இனையத்தில் பதிவுசெய்ய  எந்த நிதியும் இல்லையாம் !!!


  மந்திரத்தில் மாங்காய் காய்க்க  வேண்டும். இவ்வளவு காலம் காய்த்தது எப்படி ?

      கல்வி அதிகாரிகளின் கட்டாயத்தில்  தலைமையாசிரியர்கள் தன் சட்டைப்பை காசை   ஒரு மாணவனுக்கு  ரூ. 10 வீதம் Browsing center ல் கொடுத்து இப் பணியை செய்து வந்தனர். இதில் கல்வித்துறைக்கு என்ன இடையூரோ ? புதிதாக Android phone mobile application மூலம் இப்பணியை செய்ய    பல தொழில் நுட்ப இடையூறுகளுடன் கூடிய புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

      இதில் சர்வர் தேவையான அளவு வழங்கப்படவில்லை.  இரவு ஒருமணி வரை சுத்திக்கொண்டு தான் உள்ளது. இரவு 2 to 6 சர்வர் கிடைத்தும் தொழில் நுட்ப குறைவு காரணத்தால் மாணவர் புகைப்படம்  பதிவேற்றம் செய்ய இயலவில்லை.

         எனவே கல்வித்துறையே  மாணவர்கள் விபரங்களை பள்ளிகளில் படிவங்கள் மூலம் பெற்றுக்கொண்டு  இணையத்தில் பதிவுசெய்து கொள்ளட்டுமே!

       ஆசிரியர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்யட்டுமே!

     இயக்க பொறுப்பாளர்களே சக ஆசிரிய நண்பர்களே இனி EMIS சம்பந்தமாக இப்பணியை  இந்த தேதிக்கு முன் முடிக்க வேண்டும் என்று பீதியைத் தூண்டும் செய்தியை  ஊடகங்கள் மூலம் தயவுசெய்து பகிர் வேண்டாம்.

   Emis இணையத்தில் பதிவேற்றம் ஆசிரியர்களின் வேலை அல்ல  என்பதை தமிழகமெங்கும் பரப்புங்கள்.

      தொழிலாளர்களிடம்  காணப்படும் ஒற்றுமை ஆசிரியர்களிடமும் மலரட்டும்.  ஆசிரியர்கள் data operator  பணி செய்ய வேண்டாம்.  கற்ப்பித்தல் பணியை வேறுயாரும் நமக்கு செய்வதில்லை. இக்காலம் நம்மிடம் குறைக்காண குழு அமைத்து செயல்படுகிறது. எனவே நம் பணியை மட்டும் நாம் சிறப்பாக செய்வோம்.

7 comments

 1. தமிழகத்தில் பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் 20 மாணவர்கள் தான் உள்ளனர்.மாநம் 70000-80000 வாங்கும் தலைமை ஆசிரியர்களுக்கு வேலையே இல்லை.EMIS வேலையாவது செய்யட்டுமே.இதற்கு கூடவா முடியவில்லை.இவர்கள் கற்பிக்கும் அழகுதான் மாணவர் சேர்க்கையிலேயே தெரிகிறதே.தனியார் பள்ளிகள் படங்களே கணினியில் நடத்துகிறார்கள்.மாணவர் பற்றிய விவரங்களை இணையத்தில் பதிவேற்றவே இத்தனை அலுப்பா.செய்யுங்களேன்.அதை விட வேறு என்னதான் வேலை?

  ReplyDelete
 2. ஒரு மாணவனுக்கு ரூ.10.. அவசியமற்ற ஒன்று...

  என் குடும்பத்திலும் இரு தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்... jio 349 போட்டு.. hotspot போட்டு laptopல் கொடுத்துவிடுவேன்... EMIS entry போட்டு விடுவார்கள்.. ஒன்றுமே பிரச்சனை இல்லையே!!!!..

  பல தலைமை ஆசிரியர்களுக்கு கணினி பற்றி அறியாமல் இருப்பது தான் இதன் முக்கிய பிரச்சனையே...

  Browsing centre க்கு செல்வதும் அதனாலே தான்... central govt.. shaalasidhi entryக்கு கூட.. ஒரு ஒன்றியமே ஒருவரை நம்பி (பயிற்சி பெற்ற ஒருவர்) ஓடிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது...

  இவை யாவுமே.. ஆசிரியர்கள் தங்களை technology க்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவில்லை என்பதே (நான் அனைவரையும் கூறவில்லை, சிலரை மட்டுமே)...

  தயவு செய்து..emis entryயை எல்லாம் ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... ஒரு entryக்கு.. குறைந்தது 10 நிமிடங்கள் மட்டுமே செலவாகிறது... அதுவும் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் செயதாலே போதும்...

  இதற்கென data entry operator நியமனம் செய்தால்.. உங்கள் மாணவரின் biodata மாறிப்போக வாய்ப்புள்ளது... smart cardல் காஜல் அகர்வால் வந்தது போல...

  எனவே.. இதை ஒரு வேலையாக எண்ணாமல்.. நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்

  ReplyDelete
  Replies
  1. U r absolutely correct... Ethu arisiyar velai illai endru solla evargaluku epadi manam varugiratho

   Delete
 3. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

  2013 TET க்கு முழு முன்னுரிமையை போராடி பெற
  இதுவே தக்க தருணம்
  இனியும் அமைதியாக இருக்காதீர்கள்.
  உங்கள் அமைதியால் நாம் பெற்ற சான்றிதழ் 2020 ஆகஸ்ட்டில் அல்ல
  2018 பிப்ரவரியிலையே காலாவதியாகிவிடும்.

  வலுவான கூட்டமைப்பில் இணையுங்கள்
  உரிமையை நிலைநாட்டுங்கள்.
  2013 TET தேர்ச்சிப்பெற்றோர் கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி்பெற்றோர் கூட்டமைப்பு
  https://chat.whatsapp.com/3wIfdmxeXFJEeAAUOxurlB

  ReplyDelete
 4. Computer teacher posting podunga sir emis a nanga pathukurom...

  ReplyDelete
 5. எமிஸ் வேலையை ஆசிரியர்கள் செய்யட்டும் என்று கூறுபவர்களுக்கு! 5 வருடங்களாக இந்த எமிஸ் வேலையை இரவு பகலாகப் பார்த்து பார்த்து அலுத்து விட்டோம். மேல்நிலைப் பள்ளியில் மாட்டியவர்களுக்கு இந்த வேலை மட்டுமல்லாமல் லேப்டாப் ஆன்லைன் என்ட்ரி, சைக்கிள் ஆன்லைன், ஸ்காலர்சிப், 10, 11, 12 தேர்விற்கு ஆன்லைன் என்ட்ரி என பல்வேறு வேலைகளில் மிகுந்த மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருக்கும்போது எமிஸ் வேலையை இரவு இரண்டு மணிக்கு தினமும் கண்விழித்து முடிக்கச் சொல்பவர்கள் அதற்கான ஊதியமும் வழங்கப்போவதில்லை. பகலில் வேலையை செய்யும்படி செய்யவும் இல்லை. இதில் பல்வேறு பள்ளிகளில் பகுதிநேர கணிப்பொறி ஆசிரியர்கள் பகல் மட்டுமல்லாது இரவிலும் இந்தப் பணிகளில் மன வேதனையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!. இவர்களது வயிற்றெரிச்சல் கண்டிப்பாக ஒரு நாள் வேலை செய்யும்!

  ReplyDelete
 6. EMIS முடிக்க மட்டுமின்றி லேப்டாப் ஆன்லைன் என்ட்ரி, சைக்கிள் ஆன்லைன், ஸ்காலர்சிப், 10, 11, 12 தேர்விற்கு ஆன்லைன் என்ட்ரி என பல்வேறு வேலைகளில் பள்ளிகளில் பெரும்பாலும் பகுதிநேர கணினி ஆசிரியர்கள் என்று பெயருக்கு அழைக்கப்படும் முழுநேரமாக பணியாற்றும் கணினி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் இதற்கான எந்த தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை பகுதிநேர ஆசிரியர்கள் பற்றி பேச ஒருவரும் இல்லை...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives