TNPSC - அறநிலையத் துறை செயல் அலுவலர் தேர்வு: விண்ணப்பித்தவர்களில் 33% பேர் மட்டுமே பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2018

TNPSC - அறநிலையத் துறை செயல் அலுவலர் தேர்வு: விண்ணப்பித்தவர்களில் 33% பேர் மட்டுமே பங்கேற்பு

தமிழக அரசின் இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் (கிரேடு-1) பதவியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெற்றது.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப் பள்ளி,பெரம்பூர், கிண்டி மாநகராட்சி பள்ளிகள் ஆகிய 3 மையங்களில் தேர்வெழுத 790 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். முதல் நாள் காலைபொது அறிவு தாள் தேர்வும், பிற்பகல் இந்துசமய அறநிலைத் துறை சட்டம் தொடர்பான தேர்வும் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று காலை சட்டத் தேர்வு நடைபெற்றது.

தேர்வு நேரம் நீட்டிப்பு

இத்தேர்வில் விடைத்தாளில் (ஓஎம்ஆர் ஷீட்) வரிசை எண்களும் விடையை அடையாளமிடும் இடமும்ஒரே வரிசையில் இல்லாமல் சற்று முன்னும் பின்னும் இருந்ததால் தேர்வர்கள் விடையளிக்க சற்று குழம்பினர். இதைத்தொடர்ந்து, தேர்வர்களுக்கு வேறு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வு தொடர்ந்தது. இதனால், ஏற்பட்ட தாமதத்தை சமாளிக்கும் பொருட்டு தேர்வு நேரம் அரை மணிநேரம் நீட்டிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைய வேண்டிய தேர்வு 1.30 மணிக்கு முடிவடைந்தது. செயல் அலுவலர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி