1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல்இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2018

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல்இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஏப்ரல் மாத இறுதிக்குள் 1,6,9, 11-ம் வகுப்புகளுக்குபுதிய பாடப்புத்தகம் தயாராகிவிடும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி கடந்த 20.7.2017 அன்று தொடங்கப்பட்டது. 20.11.2017 அன்று வரைவு பாடத்திட்டம்தயாராகிவிட்டது. தமிழக அரசு எவ்வளவு விரைவாக செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். பொதுவாக, மத்திய அரசு பாடத்திட்டத்தை மாற்றியமைக்கிறது என்றால் 2 ஆண்டுகள் ஆகும் என்று சொல்வார்கள். வரும் கல்வி ஆண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ள நிலையில், தற்போது ஒன்றாம் வகுப்புக்கும் 9-ம் வகுப்புக்கும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அச்சிடும் பணிக்காக அதற்கான குறுந்தகடுகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 6, 11-ம் வகுப்புகளுக்கானபாடத்திட்டத்துக்கான குறுந்தகடுகள் இன்னும் 15 நாளில் தயாராகும். எனவே, 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தயாராகிவிடும்.மாணவர்களின் எதிர்கால நலனையும் பெற்றோரின் விருப்பத்தையும் மனதில்கொண்டுதான் பிளஸ் 1 வகுப்புக்குஇந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ நுழைவுத்தேர்வில் பிளஸ் 1 வகுப்பில் இருந்து ஏராளமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இல்லாதகாரணத்தால் மாணவர்கள் அப்பாடங்களை சரியாக படிக்கவில்லை. எனவேதான். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தடுமாறிப்போய்விட்டார்கள்.புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலைக்கல்வியில் பொதுப்பிரிவில் 26 பாடங்களும், தொழிற்கல்வி பிரிவில் 12 பாடங்களும், 1,6,9 வகுப்புகளில் 14 பாடங்களும் இடம்பெறும். சிறுபான்மை மொழிப்பாடங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 174 பாடப்புத்தகங்கள் இருக்கும்.எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேள்விகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி