தமிழ்நாட்டில் 10 மையங்களில் நீட் தேர்வு நடைபெறும்: சி.பி.எஸ்.சி. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2018

தமிழ்நாட்டில் 10 மையங்களில் நீட் தேர்வு நடைபெறும்: சி.பி.எஸ்.சி. அறிவிப்பு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் 10 மையங்களில் நடைபெறும் என்று சி.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு போல் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை, வேலூர் என 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சி.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டயாம் என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் எளிதாக சென்று தேர்வு எழுதும் வகையில் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நீட் தகுதி தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. வரும் மே 6-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி