காப்பி அடிக்க முடியாததால் தேர்வை தவிர்த்த 10 லட்சம் மாணவர்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2018

காப்பி அடிக்க முடியாததால் தேர்வை தவிர்த்த 10 லட்சம் மாணவர்கள்!!

லக்னோ :
உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 6 ல் துவங்கி நடந்து வருகிறது. இதில் தேர்வு எழுத சுமார் 66 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்த்துள்ளனர். ஒரே நேரத்தில் மிக அதிக அளவிலான மாணவர்கள் தேர்வை தவிர்த்திருப்பதே இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2016 ம் ஆண்டில் அதிகபட்சமாக 6.4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொதுத்தேர்வை தவிர்த்துள்ளனர்.
இது குறித்து மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர் நீனா ஸ்ரீவட்சவாவிடம் கேட்ட போது, ஆங்கிலம் மற்றும் கணித தேர்வின் மீதான பயம் காரணமாக அதிகமான மாணவர்கள் தேர்வை தவிர்ப்பது வழக்கமானது தான். இருப்பினும் இதற்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

2 comments:

  1. வட மாநிலங்களின் கல்வித்துறையை விட பல மடங்கு தரம் உயர்ந்தது நமது தமிழ்நாட்டின் கல்வித்துறை என்பதற்கு மேற்கூரிய செய்தியே சான்றாகவும் .
    தரமான நீட் தேர்வு குறித்து ஆதரவு தரும் அரசியல் தலைவர் எங்கே??????
    ?
    இது தானே இந்தியா முழுமைக்கான தரம் என்று எடுத்துக் கொள்ளலாமா தேசியவாதிகளே .......
    மாநில உரிமைகள் மீது மத்திய அரசு கை வைக்கும் போது எதிர்த்து குரல் கொடுக்காத தன்மைக்கு, அதை "நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள் ஆகும்" என்று
    நாளை உச்ச நீதிமன்றத்தின் வாயாலேயே சொல்ல வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.
    மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என எல்லா உரிமைகளும் ஒவ்வொன்றாகப் பரிக்கப்பட்டுக் கொண்டே வந்து கடைசியில் அவர்கள் ஆட்டினால் மட்டும் செயல்படக்கூடிய பொம்மை அரசாக மாநில அரசை ஆக்கும் நிலை வரும்.
    அப்போ உரிமை, உரிமை, உரிமை என்று வெற்று கோஷத்துடன் அடங்கி அடக்கமாகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. kalvi tharam ellam oru mannum ila, anga exam tough ah iruku inga ethu eluthanulum pass avlo than

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி