பிளஸ்1 உள்ளிட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

பிளஸ்1 உள்ளிட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்!

மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் நடைபெற இருப்பதால் தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 1.3.2018 முதல் 16.4.2018 வரை மேல்நிலை கல்வி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாமாண்டு அரசு பொது தேர்வுகளும் மற்றும் 16.3.2018 முதல் 20.4.2018 வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதால் இத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்கள் வைத்துள்ள இலவச பேருந்து பயணச்சீட்டின் அடிப்படையிலேயே அவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு தேர்வு நாட்கள் முடியும் வரை மாநகரப்பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்குமாறு மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

எனவே, அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உத்தரவை தவறாமல் கடைபிடித்து பள்ளி மாணவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையம் வரை சென்று திரும்ப அவர்களை இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

 மேலும், உதவி மேலாளர்கள், பயணசீட்டு பரிசோதகர்களுக்கு உத்தரவு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். பள்ளி நேரங்களில் எக்காரணத்தை கொண்டும் பேருந்துகளை நிறுத்தி காலம் தாழ்த்தாமல் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணம் செய்யும் வகையில் பேருந்து இயக்கிட ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி