அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்

அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது.

பல்வேறு பிரிவு :

 இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் நேற்று, அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

முக்கிய முடிவு :

இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக சேர்ந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நீக்காமல் இது போன்று தமிழகத்துள் உள்ள மற்ற கல்லூரிக்கு மாற்றி இந்த அரசு பெரும் மோசடி செய்கிறது. இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. வேலைக்காக காத்திருப்பவகர்கள் காத்துக்கொண்டே இருப்பதை தவிர வேறு வழியில்லை..

    ReplyDelete
  2. அதிமுக கட்சியின் நிதியாக பல்லாயிரம் கோடி அண்ணாமலை ஊழியர்களிடம் பெற்றுக்கொண்டு தான் சுயநிதி பிரிவில் முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களை அரசுஊழியர் களாக அங்கீகாரம் வழங்கி வருகிறார்கள்.ஏற்கனவே 4500 ஊழியர்களை அரசுக்கல்லூரிக்கும் அரசு அலுவலகங்களில் நியமித்துவிட்டார்கள். தற்போது முறைகேடாக நியமிக்கப்பட்ட 500 கம்ப்யூட்டர் புரகிராமர்களில் 200 பேரிடம் தலா 5 லட்சம் பெற்றுக்கொண்டு உதவி பேராசிரியர் பணியாக பதவி கொடுத்து அவர்களையும் அரசுக்கல்லூரி களில் நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதுபேல தேவையில்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்ட சுமார் 540 சிறப்பு அதிகாரி(SO) பணியாளர்கள் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களையும் உதவி பேராசிரியர் பதவி கொடுத்து (தமிழ்,English,phy,chem,zoo,bat.....)அரசுக்கல்லூரிக்கும் மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதுபோல் பொறியியல் துறையில் முறைகேடாக நியமிக்கப்பட்ட சுமார் 300 பேராசிரியர் களையும் அரசுக்கல்லூரி களில் நியமிக்கப்படுவதும் என்ன கொடுமை. இத்தனைக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2003 ஆண்டு அன்றைய நிலையில் அரசு நிதி பெறும் பணியிடங்கள் UGC அனுமதி அளித்தபணியிடங்கள் 650 பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் சுமார் 3500 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டுமே.ஆக மொத்தம் சுமார் 4500 பணியிடங்கள் மட்டுமே. ஆனால் தற்போது சுமார் 15000 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்.அதைவிடக்கொடுமை சுமார் 700 பேராசிரியர்கள் தங்கள் மனைவிக்கு பேராசிரியர் பணிவாங்கிதந்துள்ளார்கள் அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணவனும் மனைவியும் ஆக பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர்.இது எப்படி சாத்தியம்?.
    ஒரு பக்கம் கேவை பாரதியார் பல்கலையில் முறைகேடாக சிலர் பணியில் சேர்ததற்க்கே துணை வேந்தரை கைதுசெய்கிற அரசு மறுபக்கம் பலகோடி களை பெற்றுக்கொண்டு முறைகேடாக நியமிக்கப் பட்ட அண்ணாமலை ஊழியர்களுக்கு சலுகை காட்டி அவர்களை அரசுக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.இந்த முறைகேடுகளுக்கு விடிவு வேலையில்லாத பேராசிரியர்கள் அணிதிரண்டு போராட்டம் செய்தால்தான் சரியாகும்.அன்புக்குரிய மாற்றுதிறனாளிகளே போராட்டத்தின்மூலமே தங்களது உரிமைகளை பெறும் நிலைமை. எனவே நாம் போராட்டம் மூலமாகவோ அல்லது நீதிமன்றம் மூலமாகவோ தீர்வுகாணவேண்டும்.

    ReplyDelete
  3. அரசு பள்ளிகளில், அரசு கல்லூரியில் வறுமையுடன் மிகவும் சிரமப்பட்டு பி.ஏ.,எம்.ஏ. எம்.பில் பட்டம் பெற்று அதன் பின்னர் அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியராக சேர செட் என்னும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு 40 வயதை கடந்த நிலையில் , அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பல லட்சம் இலஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை அரசு கலைக் கல்லூரியில் பணி நிரவல் செய்வது என் வயிற்றில் அடிக்கும் செயலல்லவா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி