அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள்: கணிதவியல் நிபுணர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2018

அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள்: கணிதவியல் நிபுணர் தகவல்

அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்கள் பாடம் நடத்தும் நிலை உருவாகும் என்று குஜராத் கணிதவியல் நிபுணர் சசிரஞ்சன் யாதவ் கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 162 மாணவ-மாணவிகளுக்கு ஆளுநர் பதக்கங்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். 44,994 பேர் பிஎட் பட்டமும், 1,473 பேர் எம்எட் பட்டமும் 118 பேர் எம்பில் பட்டமும், 21 பேர் பிஎச்டி பட்டமும் பெற்றனர்.

முன்னதாக, குஜராத் காந்திநகர் இந்திய கல்வியியல் நிறுவன பல்கலைக்கழக துணைவேந்தரும், பிரபல கணிதவியல் நிபுணருமானபேராசிரியர் சசிரஞ்சன் யாதவ் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:தகவல் தொழில்நுட்பம் வெகு விரைவாக வளர்ந்துவரும் நிலையில், ஏற்கெனவே இருந்து வரும் பல வேலைவாய்ப்புகள் மறைந்து வருகின்றன. அதேநேரத்தில் அதற்குப் பதில் பல்வேறு புதியவேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. தற்போது டேட்டா அனலட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன.முன்பு கல்வியின் ஆதாரமாக ஆசிரியர்கள் திகழ்ந்தனர். மாணவர்கள் தங்களுக்கு எதேனும்சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களை நாடுவார்கள். ஆனால், இப்போது கூகுளில் தகவல்களை தேடுகிறார்கள்.

அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்கள் பாடம் நடத்தக்கூடிய சூழல் உருவாகும் என்றார்.உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் பங்கேற்று பேசினார். முன்னதாக, துணைவேந்தர் எஸ்.தங்கசாமி வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் பதிவாளர் (பொறுப்பு) ரவீந்திரநாத் தாகூர், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

5 comments:

  1. apo students kooda robo vechukonga boss.... unga automation ku oru alavu illama poitu iruku....

    ReplyDelete
  2. Then close all Dted and Bed institutions

    ReplyDelete
  3. Oh.. then who s gonna programme that robots to teach??

    Teachers right...

    ReplyDelete
  4. Atutha 20 aantukalil robot intha thamil naattil aatchi saiyum, intha amaichsarkal atharku k.... Kaluvarkal so Happy

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி