தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2018

தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு

விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்பட 133 கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வி ஆண்டில் திரும்பப் பெறப்பட்டது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த அவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா அளித்த எழுத்துப்பூர்வமான பதில்:
ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சிலின் (என்சிடிஈ) விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாடு முழுவதும் 133 ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் திரும்பப் பெறப்பட்டது.


தமிழகத்தில் 20 கல்வி நிறுவனங்கள், கர்நாடகத்தில் 29, மகாராஷ்டிரத்தில் 28, மத்தியப் பிரதேசத்தில் 17 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டது
இந்தப் பட்டியலில் தில்லியைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இல்லை என்று அந்தப் பதிலில் உபேந்திர குஷ்வாகா குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு ஓராண்டு வரை அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.

4 comments:

  1. erkanave ella b.ed d.ted college um kaathu vangittu iruku, ithuku mela puthusa college thodangurathuku andha kasa kondu poi palani malai kovil undiyalla podunga punniyama pogum,

    ReplyDelete
  2. அப்ப என்ன ....... க்கு அனுமதி கொடுத்து நடக்க விட்டு வேடிக்கை பார்த்தீர்க்கள் °?
    ஏன் தெருத்தெருவா இறக்கி போயி செக் பண்ணி பார்த்து ஆரம்பத்திலேயே களைய வேண்டியது தானே?
    ஒரு வீட்டைக் கட்டும் போது கால் சதுரடி இடம் வெளியில் அரசின் இடத்தில் கட்டினால் இடித்துத் தள்ளும் அரசு ஏன் இந்த மாதிரி போலிகளை கண்டுபிடித்து அழிக்கக் கூடாது.
    ஏன் சார் ,
    அரசு குறைந்த செலவில் கல்வியை தர மாட்டீங்கன்னு இப்ப புரியுது......
    கல்வியை வியாபாரியின் கையில் கொடுத்து விட்டு , மக்கள் ஏமாற்றப்படும் வரை வேடிக்கை பார்த்து விட்டு, கடைசியில், ஏமாற்றியவனை பெயிலில் வெளியில் விடுவீர்ர்கள் (or) AC யில் உள்ளே வைப்பீர்கள்.
    ஆனால்,
    பாதிக்கப்பட்ட மக்கள் தெருவில் இறங்கி போராடினால் லத்திச்சார்ஜ் செய்வீர்கள் .....
    கடைசி வரை மக்களைப் பாதுகாக்க மாட்டீர்கள் .....
    உங்களை போல் பொறுப்பற்ற முறையில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கெல்லாம் அறிவுரை கூறிய,
    எங்கள் ஐயன் திருவள்ளுவனின் திருக்குறளில் உள்ள ஆட்சியாளின் பண்புகளைக் கூறும் அதிகாங்களை பாடத்திட்டமாக வைத்து ஒரு நீட் தேர்வு வைத்தால் கூட, அதிலும் எவ்வாறு திள்ளுமுள்ளு பண்ணலாம் என்று திருவள்ளுவனுக்கே பயிற்சி கொடுக்கும் பயிற்சி மையங்களைத் துவங்கி பயிற்சி அளிக்கக்கூடிய அதிபுத்திசாலிகள் நீங்கள் ......

    ReplyDelete
  3. அந்த 20ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் பெயர் மற்றும் எந்த மாவட்டம் என்ற ஆவணத்தையும் மாண்புமிகு தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  4. அந்த 20ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் பெயர் மற்றும் எந்த மாவட்டம் என்ற ஆவணத்தையும் மாண்புமிகு தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி