தமிழகத்தில் 28 லட்சம் பேர் எழுதும் பொது தேர்வுகள் மார்ச்சில் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

தமிழகத்தில் 28 லட்சம் பேர் எழுதும் பொது தேர்வுகள் மார்ச்சில் துவக்கம்

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் துவங்கஉள்ளன. இந்த தேர்வுகளில், 28 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 3,500 பள்ளிகளில், தேர்வு மையங்கள்அமைக்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும்பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொது தேர்வு துவங்க உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 8.69 லட்சம் பேர், பள்ளிகளில் படிக்கும் மாணவ -- மாணவியர்.தமிழகத்தில் இருந்து, 6,754 பள்ளிகளைச் சேர்ந்த, 8.52 லட்சம் மாணவ - மாணவியரும், புதுச்சேரியில், 147 பள்ளிகளைச் சேர்ந்த, 15,140 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

இத்தேர்வு எழுதுவோரில், 4.03 லட்சம் பேர் மாணவர்கள்; 4.64 லட்சம் பேர் மாணவியர். 5.48 லட்சம் பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்வுஎழுத உள்ளனர். வரலாறு பிரிவில், 14 ஆயிரம்; வணிகவியல்,கணக்கு பதிவியல் பிரிவில், 2.42 லட்சம் பேரும் தேர்வு எழுதுகின்றனர். தொழிற்கல்வி பிரிவில் படிக்கும், 62 ஆயிரத்து, 751 பேரும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டு, 279 தேர்வு மையங்கள் கூடுதலாகஅமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மார்ச், 7ல் தேர்வுகள் துவங்குகின்றன. பிளஸ் 2 வகுப்புகள் அறிமுகமாகி, 40 ஆண்டு களில், பிளஸ் 1 மாணவர்கள், முதன் முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த ஆண்டு, 8.62 லட்சம் பேர், பிளஸ் 1 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில், 4.60 லட்சம் மாணவியர் அடங்குவர்.இத்தேர்வுகளுக்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,790 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச், 16ல் துவங்கும் 10ம் வகுப்பு தேர்வில், 10.70 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 5.10 லட்சம் பேர் மாணவியர்.

1 comment:

  1. Sir Mutual transfer 2018 ku willing padasalai la start panni 250 ku mela register pannitanga but kalviseithi la eppo start panna poringa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி