பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு - 2 முக்கிய குற்றவாளிகள் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு - 2 முக்கிய குற்றவாளிகள் கைது

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கணேசன் (வயது 38), சேக் தாவூத் நாசர்(32), ரகுபதி(34), சுரேஷ்பால்(34) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன்(45) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

3 comments:

  1. நல்ல முடிவு சொல்லுங்க......Cv list vidunga

    ReplyDelete
  2. special teacher result ennachu anybody tell me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி