Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

+2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கு இலவச டிவிடி மெட்டிரியல்- அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர் கரூர் கார்த்திகேயன்


+2 கணக்குப்பதிவியல் பாடப்பொருளைமாணவர்கள் புரிந்துகொள்ளும்வண்ணம் டிவிடி வடிவில் தயாரித்துகரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன்என்பவர்  வெளியிட்டுள்ளார்.
இதுஆசிரியர்கள், மாணவர்கள் நல்லவரவேற்ப்பை பெற்றுள்ளது.கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கானபுத்தாக்கப்பயிற்சியும், பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில்கணக்குப்பதிவியல் பாடத்திற்கான’வெற்றிகொடிகட்டு +2 கணக்குப்பதிவியல்பாட வீடியோ மெட்டிரியல்’ (டிவிடி)வெளியிடப்பட்டது.இந்த வீடியோ மெட்டிரியலை தயாரித்துவழங்கிவரும் கரூர் மாவட்டம் ஈசநத்தம்அரசுமேல்நிலைப்பள்ளியின்வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன்

இது குறித்து நம்மிடையேபேசுகையில்..,"கடந்த ஐந்து ஆண்டுகளாக வணிகவியல் மற்றும்கணக்குப்பதிவியல் பாடங்களில் 100% தேர்ச்சியும், பல மாணவர்களை 200க்கு200 மதிப்பெண்கள் பெறவைத்தும்வருகிறேன்.முன்பு கோடைபண்பலைவானொலியில் அறிவிப்பாளராகவும், தூர்தர்ஷனின் பொதிகைதொலைக்காட்சியில்செய்திவாசிப்பாளராகவும்பணியாற்றிய அனுபவத்தோடு புதியதொழில்நுட்பங்களோடு  புதியஅணுகுமுறைகளைக் கையாண்டுபாடங்களை நடத்திவருகிறேன்.எனது மாணவர்களுக்கு  வணிகவியல்பாடம் தொடர்பாக எனது குரலில் பேசிநானே தயாரித்த வீடியோக்கள் மூலமாகபாடங்களை நடத்தி வந்தேன். தேர்ச்சிவிழுக்காட்டிலும் நல்ல முன்னேற்றம்கண்டேன்.அதை  ஒரே டிவிடிதொகுப்பாக்கி அனைத்து அரசு பள்ளிமாணவர்களும் பயன்பெறும் வண்ணம்இலவசமாக வழங்கவேண்டும் என்றஎண்ணத்தில் பாடப்பொருளைஉள்ளடக்கிய இந்த டிவிடியை சேவைநோக்கோடு வழங்கி வருகிறேன்.பாடப்பொருளை படமாக பார்ப்பதால்  படிப்பதில் மாணவர்களின் ஆர்வம்கூடும் என்பதோடு பாடத்தையும்  அவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் என்பது எனது பள்ளிமாணவர்கள் மூலம் கிடைத்தஅனுபவம்.கடந்த ஆண்டு +2 வணிகவியல் பாடத்திற்கு வீடியோ மெட்டிரியல் தயாரித்து அதை அனைத்து அரசு மற்றும் பார்வையற்றோர் பயிலும் பள்ளிகளுக்கும் வழங்கினேன். மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சொன்னார்கள். இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், அதிக தேர்ச்சி விழுக்காடும் அடைந்துள்ளதாக ஆசிரிய பெருமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பார்வைதிறனற்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியிலும் இந்த வீடியோ மெட்டிரியல் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.அதே போல இந்த ஆண்டும் +2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கும் வீடியோ மெட்டிரியல் தயாரித்து வெளியிட்டுள்ளேன். அனைத்துஅரசுபள்ளி மாணவர்களும் அதிகமதிப்பெண்கள் பெறவேண்டும்என்பதற்காகவே இந்த டிவிடியை எனதுசொந்த செலவில் தயாரித்துவழங்கிவருகிறேன். மேலும் இதில் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்து முனைவர்.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் பிரத்யேகமான வீடியோ உரையையும் இணைத்து வெளியிட்டுள்ளேன்.

இந்த டிவிடி தேவைப்படுவோர் 9943149788 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் அல்லது karthikeyancommerce என்கிற  Youtubeசேனலை Subscribe செய்து, இலவசமாகபதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives