தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2018

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்கை, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, 2015-16ம்ஆண்டு கல்விக் கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டது.இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து செங்குன்றம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, டான்போஸ்கோ பள்ளி உள்ளிட்ட சில தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், “எங்களது பள்ளிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள கட்டணம் தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.கட்டணம் நிர்ணயிக்கும்போது பள்ளியின் எதிர்காலம், உள்கட்டமைப்பு, எதிர்கொள்ளும்கட்டாய செலவினங்கள் என அனைத்து செலவினங்களையும் கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டு இருந்தது.இந்த வழக்குகள் நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.வி.முரளிதரன் ஆகியோரைக் கொண்ட அமர் வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ‘‘ஆசிரியர்களின் ஊதியத்தை மட்டும்கல்விக் கட்டண நிர்ணயக் குழு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.ஆசிரியர்களுக்கான சேமநல நிதி பங்களிப்பு, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது’’என தனியார் பள்ளி தரப்பில் வாதிடப்பட்டது.அதேபோல, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே பணியில் நியமிக்க வேண்டும் என குழு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கல்வியின் தரத்தை மேம் படுத்த தனியார் பள்ளிகள் தங் கள் விருப்பம்போல ஆசிரியர்களை நியமிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.குறைந்தபட்சமாக இத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண் டும் எனக் கூறியுள்ள கல்வி உரிமைச் சட்டம், அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

மேலும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில்கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆய்வு செய்ய வேண்டும்.அதற்காக இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம். இப்பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம் தொடர்பான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்தக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி