'தினமலர்' சார்பில் பிப்., 4ல் 'நீட்' வழிகாட்டிகருத்தரங்கு! : 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2018

'தினமலர்' சார்பில் பிப்., 4ல் 'நீட்' வழிகாட்டிகருத்தரங்கு! : 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்

'நீட்' மாதிரி தேர்வைத் தொடர்ந்து, 'தினமலர்' சார்பில், 4ம் தேதி, சென்னை, தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், 'நீட்' தொடர்பான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
கருத்தரங்கில், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளை தேர்வு செய்யும் விதம் உட்பட, அப்ளிகேஷன் முதல், அட்மிஷன் வரையிலான அனைத்து தகவல்களையும், கல்வி நிபுணர்கள் நேரடியாக வழங்க உள்ளனர்.கடந்த, 28ல், 'தினமலர்' சார்பில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வில், மாணவர்கள் செய்த பொதுவான பிழைகளும், அதை சரிசெய்வது பற்றியும் விளக்கமளிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லுாரிகளில் இடம் பிடித்த மாணவர்கள், அவர்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில், பிரத்யேக கேள்வி - பதில் நிகழ்வும் இடம் பெறுகிறது.

கருத்தரங்கம், காலை, 10:00 முதல் மதியம், 1.00 மணி வரைநடைபெற உள்ளது.'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இணைந்து, இக்கருத்தரங்கை நடத்துகிறது. 'நாலெட்ஜ் பார்ட்னர்' ஆக, ஆகாஷ் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.மருத்துவப் படிப்புகள் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து, எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன பேராசிரியர் சத்தியஜித் விளக்கமளிக்கிறார்.'நீட் தேர்விற்கு தயாராவது எப்படி?' என்பது குறித்து, ஆகாஸ் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் உலகநாதன் மற்றும், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் குறித்து, கல்வி ஆலோசகர் கோவிந்தராஜ் ஆகியோர் விளக்கமளிக்கின்றனர்.

தேர்வு குறித்து விளக்கம்

கருத்தரங்கில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்கலாம். நிகழ்வில், 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் ஏன் இப்போதே,'நீட்' தேர்விற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.மேலும், கருத்தரங்கில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' மாதிரி கேள்வித்தாள் இலவசமாக வழங்கப்படுகிறது.

1 comment:

  1. மேலும் ஒரு சந்தேகம்,
    ஐயா,
    இருக்கின்ற கிராமப்புற , நகர்புற பள்ளிகளை மேம்படுத்தி,
    முறையான (இடியாத நிலை, வெள்ளையடித்த நிலை, மரம், செடி வளர்க்கப்படக் கூடிய நிலை)கட்டிட வசதி,
    முறையான (குடிக்க ) குடிநீர் வசதி
    +
    முறையான (கழுவ ) கழிப்பிட வசதி,
    முறையான (update செய்து கொண்டே இருக்கக் கூடிய) நூலக வசதி,
    முறையான (அதிகம் இல்லையென்றாலும் தேவையான நான்கு முக்கிய விளையாட்டு சாதனப் பொருட்கள் கொண்ட நிலை) விளையாட்டு மைதான வசதி,
    மற்றும்
    மேல் & உயர் நிலைப்பள்ளிகள் என்றால்
    கண்டிப்பாக
    முறையான (பராமரிப்புடன் கூடிய) ஆய்வக வசதி போன்றவற்றை மேன்படுத்துவதற்கு மத்திய அரசு உதவுவதை விட்டு,
    நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதையே முனைப்பாக இருக்கின்றது.
    இது ஏன் என்று புரியவில்லை.
    இருக்கின்ற தனியார் பள்ளிகளை கிளைகள் கொண்டு வளர்ந்து நிற்கின்றது.
    ஆனால் |
    1952 அல்லது அதற்கு பின் காமராஜர் காலத்தில் லிருந்து திராவிட ஆட்சி வரை
    முன்னேற்றம் கண்ட
    தமிழக கல்வித்துறை
    சமூக நீதியில், இலவச திட்டங்கள் மூலம் மட்டும் கண்டிப்பாக ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு உள்ளது.
    மற்றொரு முக்கியமான ஒன்று
    தாய்மொழிக் கொள்கை மற்றும் இரு மொழிக் கொள்கை இதன் மூலம் நமது தனித் தன்மை இழக்காமல் உள்ளோம் என்பது உண்மை.
    மேலும்,
    தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும்உ.வே.சு அய்யா அவர்களின் சீரிய முயற்சியினால் சுவடியில் இருந்து நூல்மையமாக்கப்பட்டத் தமிழ் ,
    பரிதிமாற் கலைஞர் அவர்களால் செம்மொழியியல்பு களைக் கொண்டு அங்கரிக்கப் பட்டத் தமிழ் பல்கலைக் கலகழ் களில் இருப்பு கொள்ளச் செய்யப்பட்டப்படியால் தான் அடுத்த தலைமுறைக்கு ஓரளவிற்கேனும் நாம் தமிழை கொண்டு செல்கிறோம். என்பது உண்மை. (கூறிய வரலாற்றுச் செய்தியில் தவறுயிருந்தால் திருத்திக் கொள்ள வி
    ழைகிறன்)
    ஆனால்வளர்ச்சிப் பாதையை கடக்க வேண்டுமெனில் செல்ல வேண்டிய பாதை நெடுந்தூரமாக உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி