அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலைமை ஆசிரியை தாராளம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2018

அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலைமை ஆசிரியை தாராளம்

பவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள்பெண் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.
ஈரோடுமாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் ௧ வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் ௨ வகுப்பு துவங்கவுள்ளது.ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.இவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 2006ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.

16 comments:

  1. சிறப்பு.......

    வணங்குகிறேன்......

    ReplyDelete
  2. B careful.politicians takeover the land?

    ReplyDelete
  3. World is exists due to this type of human god.

    ReplyDelete
  4. வாழும் அன்னை தெரசா வாழ்க

    ReplyDelete
  5. வாழும் அன்னை தெரசா வாழ்க

    ReplyDelete
  6. God punished her during lifetime.... So she became

    to

    public welfare activities

    ReplyDelete
  7. உங்கள் நிலத்தானத்திற்கு தலை வணங்குகிறோம்.

    ReplyDelete
  8. God will give you long and healthy life to you. Now I am proud to say I am a teacher. N. Jayaprakash teacher, kanchipuram.

    ReplyDelete
  9. hats off madam for your great heart

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி