தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2018

தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட  15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தர்மபுரி, சிவகங்கை, குமரி, கடலூர், தேனி, கரூர், அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.


* கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் எம். வடநேரே நியமிக்கப்பட்டுள்ளார்.

* சிவகங்கை ஆட்சியர் மலர்விழி தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* அரியலூர் மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

*தேனி மாவட்ட தலைவராக மரியம் பல்லவி பால்தேவ் நியமனம்.

*கரூர் மாவட்ட ஆட்சி தலைவராக டி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* மீன் வளத்துறை இயக்குனராக இருந்த தண்டபாணி  கடலூர்  மாவட்ட ஆட்சியராக நியமனம்.


ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.மோகன் மாற்றம்

ஆளுநரின் துணைசெயலராக இருந்த டி.மோகன் ஐ.ஏ.எஸ்-க்கு புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மோகன் பொதுப்பணித்துறை துணைசெயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி