எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2018

எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி

வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கிவாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.
ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு, மொபைல் போன், பான் கார்டு போன்றவற்றுடன் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தை சமாளிப்பதற்காக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும், ஆதார் பதிவு மையங்களை துவக்க, மத்தியஅரசு, நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பது கட்டாயம் ஆகியுள்ளதால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தங்களின், 10 கிளைகளுக்கு, ஒரு கிளை வீதம், ஆதார் பதிவு மையங்களை அமைத்துள்ளன. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, எந்த கிளையில், ஆதார் மையம் செயல்படுகிறது என, தெரியாத நிலை உள்ளது. இதை, மக்கள் எளிதில் கண்டறியும்வசதியை, ஆதார் பதிவை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனும்,தனித்துவ அடையாள எண் மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.

இதன்படி, //appointments.uidai.gov.in/easearch.aspx என்ற வலைதள முகவரியை, 'டைப்' செய்தால், ஒரு திரை தோன்றும். அதில், எந்த மாநிலம், மாவட்டம், ஊர் போன்ற விபரங்களை குறிப்பிட்டதும், எந்த வங்கிக் கிளையில் ஆதார் மையம் செயல்படுகிறது, யாரை தொடர்பு கொள்வது என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.மேலும், பதிவு மையம் அமைந்துள்ள வங்கியில், கணக்கு வைத்திருக்காதவர்களும், வங்கிக் கணக்கே இல்லாதவர்களும் கூட, எந்த வங்கிக் கிளையிலும், ஆதார் விபரங்களை பதிவு செய்யலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி