தமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2018

தமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்!!

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.
மக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள்.
தமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.

11 comments:

  1. avanungalukku appan pere theriyathu, son of persians....

    ReplyDelete
  2. Ohoooo...tamil nattula oottu vanga namakku ice vakkiranunga pa.....!! Enna oru thandhiram. Oru nalla arasiyalvathinnu nirubiththuvittarrrr......??????? Mudiyala...!!!!??

    ReplyDelete
  3. அப்ப தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் தாய்மொழியை முதன்மை படுத்திக் கொண்டு வர வேண்டும் ஃ
    ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழக இருக்கைக்கு முயற்சி செய்ய வேண்டும் மத்திய அரசு ....
    கீழடி ஆராய்ச்சியை துரிதபடுத்திய தமிழின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்ய வேண்டும் ......
    ஏன்
    தமிழக அரசியலுக்கு வரத் துடிக்கும் பிம்பங்கள், பிரபங்கள் இவற்றையெல்லாம் பேச்சிலாவது குறிப்பிட மாட்டார்கள்.......

    ReplyDelete
    Replies
    1. already KV schools la Tamil language kondu vanthutanga,,,,, navodaya schools than ulla vidama politicians problem pandranga

      Delete
    2. Optional ல இருக்குறதுக்கு பேர் கொண்டு வந்துட்டாங்கன்னு கணக்கு கிடையாது.
      தமிழ் கட்டாயம் டKG முதல் 12 th Class வரை கொண்டு வந்தால் அவர்களுடைய வாய்மொழி மெய்மொழி என்று ஏற்றுக் கொள்ளலாம்.

      Delete
    3. என்ன கொடுமை இதில் என்றால் தாய் மொழியை கட்டாயமாக்குங்கள் என்று கேட்க வேண்டிய நிலையில் உள்ளது.
      ஆனால்,
      அது மத்திய அரசுப் பள்ளியில் முதலில் செயல்படுதினால் ஏற்கலாம்.

      Delete
    4. Optional ல இருக்குறதுக்கு பேர் கொண்டு வந்துட்டாங்கன்னு கணக்கு கிடையாது.
      தமிழ் கட்டாயம் டKG முதல் 12 th Class வரை கொண்டு வந்தால் அவர்களுடைய வாய்மொழி மெய்மொழி என்று ஏற்றுக் கொள்ளலாம்.

      Delete
    5. Optional ல இருக்குறதுக்கு பேர் கொண்டு வந்துட்டாங்கன்னு கணக்கு கிடையாது.
      தமிழ் கட்டாயம் டKG முதல் 12 th Class வரை கொண்டு வந்தால் அவர்களுடைய வாய்மொழி மெய்மொழி என்று ஏற்றுக் கொள்ளலாம்.

      Delete
  4. Ithelam irukatum engada tet posting.mudeveigala mudichavigigala podungada posting pani payalugala savu krakinkikala thendangala parathesigala .tea kudichutu vanthu thiruren balnce inum iruku

    ReplyDelete
    Replies
    1. Superman sir cool cool namma kastam avangaluku puriyadhu

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி