பிழையில்லாத வினாத்தாள் : தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

பிழையில்லாத வினாத்தாள் : தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தல்

பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன.
அதற்கான ஏற்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளன. வினாத்தாள்கள், அடுத்த வாரம் இறுதி செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி துவங்கும்.கடந்த ஆண்டில், வேதியியல், பொருளியல், உயிரியல், வேளாண் அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான, வினாத்தாள்களில் விடைக்குறிப்புகள் தவறாக இருந்தன. இரண்டு வகை விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பின், விடைத்தாள் திருத்தத்தின் போது, கருணை மதிப்பெண் வழங்கி, அதை சரிக்கட்டினர்.எனவே, இந்த ஆண்டு தேர்வுகளில், வினாத்தாள்களில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்றும், அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

'கற்பிக்கும் மொழி வாரியாக, சரியான எண்ணிக்கையில் வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டும். மாணவர்களின் உண்மையான கல்வித் திறனை சோதிக்கும் வகையில், வினாத்தாள்கள் இருக்க வேண்டும். வினாத்தாள்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்றும், ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி