அரசுப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்களை கண்டு ஓட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2018

அரசுப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்களை கண்டு ஓட்டம்

ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்களை கண்டு ஓட்டம் பிடித்தனர். தினக்குளம் அரசுப் பள்ளி கட்டடம் தரமற்ற பொருள் கொண்டு கட்டப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியது.
பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஐகோர்ட் மதுரைக் கிளை தாமாக விசாரணை நடத்தியது. பின்னர் பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்கள் கேள்விக்கு பதிலதர முடியாமல் ஓட்டம் பிடித்தனர். 

1 comment:

  1. அரசுஊழியரான அதிகாரிகளே |
    நின்று பதில் சொல்லும் அளவிற்கு நீங்கள் செயல்படவில்லை என்ற உங்கள் உள்ளுணர்வு துரத்தி விட்டதா?????????
    ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வருவோமோ மாட்டோமோ என உறுதி தெரியாத மக்கள் பிரதிநிதிகள் இடம் (M.ட.AS) கேள்வி கேட்டால், ஏதோ பதில் கூறுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
    ஆனால் ,
    58 வருடம் வரை அதே துறையில் உள்ள நீங்கள் பதில் சொல்லும் இடத்திலிருந்தாலும் , உண்மையான பதில் தெரிந்தாலும்
    மனசாட்சியை கழற்றி விட்டு வேலை செய்வதால் தான் அரசுத்துறை நஷ்ட்டத்தில் இயங்கினாலும் நீங்கள் மட்டும் 50,000, 1, 00,000 என மாதம் பிறந்த உடன் மக்கள் வரிபணத்திலிருந்து சம்பளத்தை பெற்றுக் கொண்டு, அரசுத் துறை மட்டும் கேட்பாற்றற்ற பிள்ளை போன்று அனாதையாக கைவிட பட்ட நிலையில் உள்ளது.

    என்று உங்களுக்கும் மனசாட்சிவேலை செய்து நாம் வேலை மக்களுக்காக செய்கின்றோம், அந்த மக்களின் வரிபணம் தான் அதற்கு ஈடாக நமக்குத் தரப்படுகிறது என்று உணர்ந்து, அரசுத் துறை என்பது உங்களால் வளர்க்கப்படுகின்ற குழந்தை என்ற உணர்வு வருகின்றதோ அன்று அக்குழந்தை சரியான பெருமை பட்டுக் கொள்ளும் படி வளர்ந்து நிற்கும் போது அந்த புகழ் உங்களுடையது. இதில் எள்ளளவும் ஐயமில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி