தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகிறது. இதில் தமிழ் வழி படிப்புக்கு 500 இடங்களும், ஆங்கில வழிக்கு 500 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சியுடன் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் இந்த 2 ஆண்டு கால தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேரலாம். (தற்போது ரெகுலர் பி.எட். படிப்புக்கான காலமும் 2 ஆண்டுகள் ஆகும்). கடந்த ஆண்டு வரைதொலைதூரக் கல்வியில் பிஎட். படிப்புக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதில் பட்டப் படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அப்பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

மேலும், முதுகலை பட்டம் பெற்றிருந்தால் (இளங்கலை பட்டப்படிப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்ட பிஎட் படிப்பு) கூடுதலாக 3 மதிப்பெண், எம்பில் பட்டதாரியாக இருந்தால் 5 மதிப்பெண், பிஎச்டி முடித்திருந்தால் 6 மதிப்பெண் வழங்கப்படும். பிஎட் படிப்பில் சேர பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

11 comments:

  1. இன்றிலிருந்து திங்கள்கிழமைக்குள் எந்நேரத்திலும் பட்டியல் வரலாம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. https://youtu.be/Y8VdQ25GH0I TET வெயிட்டேஜ் கண்ணீர் விடும் ஆசிரியர்கள். மீண்டும் மாற்றம் வருமா?அரசு பரிசீலனை..

      Delete
    3. https://youtu.be/Y8VdQ25GH0I
      TET வெயிட்டேஜ் கண்ணீர் விடும் ஆசிரியர்கள். மீண்டும் மாற்றம் வருமா?அரசு பரிசீலனை..

      Delete
    4. ராஜலிங்கம் நண்பரே பட்டியல் வரும் என்பது உறுதிபடுத்தப்பட்ட தகவலா? அல்லது அனுமானமா?தோராய இடைநிலை ஆசிரிய பணியிடம் எவ்வளவு வரும்..தெரிந்தால் பதிவிடவும் நண்பரே

      Delete
  2. I... ....jolly. .......pattiyal varapoguthu.......... kumatha happy annachi

    ReplyDelete
  3. Thank you for your information rajalingam sir

    ReplyDelete
  4. Thank you for your information rajalingam sir

    ReplyDelete
  5. பி.எட் கணினி அறிவியல் யாரும் சேர வேண்டாம். வேறு நல்ல மேற்படிப்பு படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். 51000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகள் வேலை இல்லாமல் வாழ்விழந்து தவித்து வருகின்றோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி