சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2018

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்

நெல்லை மாவட்டம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் செயல்படும், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில், பல்வேறு அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களில், கம்ப்யூட்டர் வசதியுடன், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் சமச்சீர் கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், மானுார் ஒன்றியம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், செல்கோ இந்தியா நிறுவனத்தின் சார்பில், சூரியஒளி மின்சாரம் மூலம், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டது.

வகுப்பறையில், கரும்பலகை மீது,40 அங்குல, 'எல்.சி.டி., டிவி' பொருத்தப்பட்டு உள்ளது.நெல்லை கலெக்டர், சந்தீப் நந்துாரி, ஸ்மார்ட் வகுப்பறையை துவக்கி வைத்தார். கம்ப்யூட்டர் மூலம், மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக, எல்.சி.டி., திரையில் பாடம் நடத்தப்படவுள்ளது.

1 comment:

  1. ஊடக நண்பர்கள் வெறும் செய்திகளை மட்டும் போடாதீர். அமைச்சர் சொல்றத மட்டும் போட நீங்க ஒன்னும் அவர்கள் ஊடகம் அல்ல. பொதுவான நடு நிலை தன்மையுடன் செயல் படுங்கள். உலகதரம்வாய்ந்த கல்வி கல்வினு தம்பட்டம் அடிகிறீங்க அனால் மற்ற மாநிலத்தில் உள்ள அளவு கூட தரமான கல்வியை கொடுக்க வில்லை. ஊடக நண்பர்கள் கேள்வியே கேக்க மாட்டிங்களா? இல்ல கேள்வி கேக்க உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? இல்ல உங்களுக்கு கேள்வி கேக்க தெரியாதா? ஒரு வருடமாக சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளை (செங்கோட்டையன்) அது மாதிரி கூறி வருகிறார். அதையும் வேறு செய்தி கிடைக்காத மாதிரி நீங்களும் தினம் தினம் தயவு செய்து விளம்பரம் செய்ய வெண்டாம். இனியாவது மக்கள் கேக்க நினைக்கும் கேள்விகளை அமைச்சர்களை பார்த்து கேளுங்கள். அடுத்த முறை கல்வி அமைச்சரை சந்திக்கும் ஊடக நண்பர்கள் கணினி பாடத்தை நடமுறை படுத்த சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மேலாக புதிய பாடதிட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன அனால் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என cm cell,SCERT தேரியவில்லை. அரசு கொள்கை முடிவுனு ஒரு அல்ப காரணம் சொல்லுவாங்க பாருங்க...,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி