பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு.. இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு.. இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் கைதான இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கணேசன், சேக் தாவூத் நாசர், ரகுபதி, சுரேஷ்பால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம், சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ்பால் மற்றும் கணேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் விரைவுரையாளர் முறைகேடு வழக்கில் தரகர்களாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. பிப்ரவரி-16 நீதிமன்றத்தில் டிஆர்பி யின் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. Rajalingam mattum thiyagiya.
      Unmaiya padichi pass panavangulukkum neyayam pesi irundha uthaman.
      Unmaiyanavanga epadina pogattumnu neneikirathu Rajalingatthukku Ethu manasatchi.
      Ethanai paritchai eyuthium select agalana unnudaya muyarchi athigari kandippa jeyippa.

      Delete
    2. இக் கமெண்ட்ஸ் மூலம் உன்னுடைய மடத்தனம் நன்றாக தெரிகிறது... வாழ்த்துக்கள்

      Delete
    3. entha case apo mudium apo pg welfare result varum sir

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Is there any chance for re exam

    ReplyDelete
  4. Thalaiyai vittuvitu valai pidikiranga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி