மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2018

மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள்!


உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் பட்டியலில் முதல் 20நகரத்தில்இந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன.வளர்ந்துவரும் நவீன உலகில் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக காற்று மாசுபாடு அதிகரித்துவருகிறது. சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு காற்று மாசுபாடு குறித்து ஓர் ஆய்வு நடத்தி, அதில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், ஈரான் நாட்டின் ஷபோல் நகரம்தான் உலகிலேயே அதிக மாசுபாட்டுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப்பொறுத்து காற்று மாசுபாட்டை விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர். இந்தக் காற்று மாசுபாட்டை PM2.5 மற்றும் PM10 என்ற இருவகை மாசு துகள்களினால் அளவிடலாம்.

முதலாவதாக மனிதனின் தலைமுடியில் 30இல் ஒரு பங்கு அளவில் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கக்கூடிய PM2.5 என்ற மாசு துகள்களில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், இவ்வகைத் துகள்கள் நுரையீரல்கள் மற்றும் ரத்தக் குழாய்களுக்குள் நுழைந்து மனிதர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. இந்த PM2.5 துகள்களினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களுக்கும் கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.உலக சுகாதார அமைப்பின் PM2.5 தரவின்படி, ஈரானிய நகரமான ஷபோல் தான் முதலிடத்தில் உள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் ஈரானின் கிழக்கில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நகரம் இருக்கும் பகுதியில் வருடத்துக்கு சுமார் 120 நாள்கள் மணல் புயல் வீசும்.இந்தப் பட்டியலில், இந்தியாவின் குவாலியர் மற்றும் அலகாபாத் ஆகிய இரு நகரங்களும் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாட் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி 11ஆவது இடத்திலும், சீனவின் தலைநகர் பெய்ஜிங் 57ஆவது இடத்திலும் உள்ளது.அடுத்ததாக, காற்றில் உள்ள PM10 எனப்படும் பெரிய துகள்களை வைத்து காற்று மாசுபாட்டை அளவிடுகின்றனர்.இந்த PM10 பெரிய வகை மாசு துகள்களைச் சுவாசிக்கும்போது உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.PM10 எனும் பெரிய மாசு துகளின் தரவு அடிப்படையில் பார்க்கும்போது, பாகிஸ்தானின் பெஷாவர் நகரம் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ஈரான் நாட்டின் ஷபோல் நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி 25ஆவது இடத்திலும், பெய்ஜிங் 125ஆவது இடத்திலும் உள்ளன.2016ஆம் ஆண்டில் தேசிய தரத்துக்கு மேலான நுண்ணளவை அளிக்கும் மாசுபட்ட நகரங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 4.7 கோடி குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 55 கோடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர் என இந்தியப் பசுமை வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி