மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2018

மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு

மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அரசு சார்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கல்விக்கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையும், ஊழல் இல்லாத சூழலும், திறன்மிகு வகையில் செயல்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இதற்காக "வித்யாலட்சுமி"எனும் போர்ட்டலை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அந்த போர்டெல் மூலமே மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வித்யா லட்சுமி போர்டெல் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மட்டுமின்றி, கல்விக்கடன் தொகை குறித்தும் நிர்வகிக்கும்.இந்த போர்டல் மூலம் இதுவரை 36 வங்கிகள் 13 ஆயிரத்து 190 மாணவர்களுக்கு கல்விக் கடனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வித்யா லட்சுமி போர்டலை நிர்வகிக்கும், என்எஸ்டிஎல் இ நிர்வாக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிககன் ராய் நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவை அமைப்பு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நேரடியாக பெறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அதற்கு மாற்றாக, வித்யா லட்சுமி எனும் போர்டல் மூலமே கல்விக்கடன் விண்ணப்பங்களை பெற வேண்டும். அதன் மூலமே கல்விக்கடன் தொடர்பான பணிகள், ஒதுக்கீடு அனைத்தும் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.ஏற்கனவே லட்சக்கணக்கான மாணவர்கள் வித்யா லட்சுமி போர்டலுக்கு வந்து பதிவு செய்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம், கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் போலியானவர்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் கல்விக்கடன் வழங்குவது எளிதாகும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்இவ்வாறு அவர் தெரிவித்தார்.நாடட்டில் கல்விக்கடன் வழங்குவதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த போர்ட்டலை தொடங்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி