வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
இவற்றின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது.

வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு அடையாள ஆவணங்களுடன் ஆதார் எண்ணைகட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் பிரச்னையை தீர்க்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி