தேர்வு பாதிக்காமல் போராட்டம் : ஜாக்டோ -ஜியோமுடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

தேர்வு பாதிக்காமல் போராட்டம் : ஜாக்டோ -ஜியோமுடிவு

தேர்வு பணிகள் பாதிக்காத வகையில், சென்னையில் நடக்கும் தொடர் மறியலில் பங்கேற்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்துஉள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கோரியும் 2017 செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர். நீதிமன்றம் உத்தரவால் போராட்டத்தை கைவிட்டனர். 'வல்லுனர் குழு அறிக்கை 2017 நவ., 30க்குள் சமர்ப்பிக்கப்படும்' என அரசு உறுதி அளித்தது. ஆனால், அறிக்கை தாக்கல் செய்ய ஐந்து முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அடுத்தகட்ட போராட்டம்குறித்து ஆலோசிக்க ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பிப்., 21 முதல் சென்னையில் தொடர் மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.'பிப்ரவரி இறுதிக்குள் முடிவு ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக்ரெய்மண்ட் தெரிவித்தார்.

1 comment:

  1. தினகரன்

    முகப்பு >செய்திகள் >சென்னை

    ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு : டிடிவி.தினகரன் கண்டனம்



    2018-02-12@ 00:32:30



    சென்னை: ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:  2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் 94,000 பேருக்கு இது மிகுந்த அச்சத்தை ஏற்பத்தியுள்ளது. இதை அரசு மிகுந்த அலட்சியத்தோடு கையாளுகிறது. மேலும், 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. 

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    TTV bats for teacher candidates who cleared TET

    TNN | Updated: Feb 12, 2018, 00:41 IST

    Coimbatore: RK Nagar MLA TTV Dhinakaran on Sunday condemned the state government for not according priority to the candidates, who have cleared the Teacher Eligibility Test (TET) held in 2013 in the appointments to government schools.

    In a statement issued on Sunday, Dhinakaran alleged that 94,000 candidates, who cleared the exam in 2013, were not considered for appointments to government schools in spite of the fact that the validity of the test was only for seven years.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி