ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்திய மாணவிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2018

ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்திய மாணவிகள்


திருவண்ணாமலை அருகே ஆசிரியர்களுக்கு இணையாக 9-ம் வகுப்பு மாணவிகள் நடத்திய பாடத்தை தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்வத்துடன் கவனித்தார்.

திருவண்ணாமலை பாத் குளோபல் பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வைஷ்ணவி, பூஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு சுற்றுச்சூழல் குறித்த கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், தங்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 
இந்த கடிதத்தினை பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவிகளை சந்திக்க நேரம் ஒதுக்கினார். 

இதையடுத்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வைஷ்ணவி, பூஜா ஆகிய இருவரும் மற்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தும், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும், வகுப்பறையில் பாடம் நடத்தினார். 

அப்போது ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மாணவிகள் பாடம் நடத்துவதை உன்னிப்பாக கவனித்தனர். 

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 9-ம் மாணவிகள் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது, கல்லூரி மாணவர்களும் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கு சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

7 comments:

  1. இள​​மையும் துடிப்பும் நி​றைந்த முதன்​மைகல்வி அலுவலர் AND மாவட்ட ஆட்சியர்... திருவண்ணாம​லை மாவட்டம் ​பெற்ற ​பேறு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிலவரம் தெரியாமலேயே பேசாதீர்கள் ஐயா அம்மாவட்டத்தில் சென்று பாருங்கள் இரண்டு பேருக்கும் எவ்வளவு எதிர்ப்பு உள்ளது என்று இருவரும் விளம்பர நோக்கிற்காக செயல்படுகிறார்கள்

      Delete
    2. பள்ளி ஆசிரியர் கிராமப்புற மாணவர்களிடம் டியூசன் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார். இது பற்றி விசாரிக்க நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் புகார் அளித்தும் விசாரிக்க நேரமில்லை. விளம்பரம் மட்டும் வேண்டும்.

      Delete
    3. பள்ளி ஆசிரியர் கிராமப்புற மாணவர்களிடம் டியூசன் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார். இது பற்றி விசாரிக்க நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் புகார் அளித்தும் விசாரிக்க நேரமில்லை. விளம்பரம் மட்டும் வேண்டும்.

      Delete
  2. Excellent work. Please keep it up. Best wishes to school, teachers, parent, c.e.o., I.a.s officer. N. Jayaprakash







    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி