விடைத்தாள் திருத்தும் பணிபுறக்கணிப்பு : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

விடைத்தாள் திருத்தும் பணிபுறக்கணிப்பு : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

விடைத்தாள் திருத்தும் மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களை முகாம் அலுவலர்களாக நியமித்தால், பணியை புறக்கணிக்க தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் மணிவாசகம் கூறியதாவது: வழிகாட்டு முறைப்படி இருப்பிடத்தில் இருந்து 20 கி.மீ., துாரத்திற்குள்தான் தேர்வு பணி வழங்க வேண்டும். ஆனால் 50 முதல் 60 கி.மீ., சுற்றளவில் பணி வழங்குகின்றனர். விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பட்டதாரி ஆசிரியராக இருந்து மாவட்ட கல்வி அதிகாரியானவர்களை, முகாம் அலுவலர்களாக நியமிக்க கூடாது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அப்படி நியமித்தால், அந்த முகாம் பணியை புறக்கணிப்போம். விடைத்தாள் திருத்தல், தேர்வறை பணிக்கு ஊதிய உயர்வு அளித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும், என்றார். மாநில பொது செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன், மாவட்ட தலைவர் சலேத்ராஜா பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி