‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி