ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடையில்லை: நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடையில்லை: நீதிமன்றம் உத்தரவு


ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.சிர்ஜித் நயினா முகமது தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஊதிய முரண்பாடு களைய வேண்டும், ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 சென்னையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற போராட்டத்தால் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

சில இடங்களில் போக்குவரத்தை மாற்றி போலீசார் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்தனர். இருந்தபோதிலும், திடீரென்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் பொதுமக்களும், மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சென்னை மாநகருக்குள் போலீஸ் அனுமதி இல்லாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்  போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது அலுவலக வளாகம், தனியாருக்கு சொந்தமான வளாகம் ஆகியவற்றில் போராட்டம் நடத்தினால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது.

மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.வேலை நிறுத்ததில் ஈடுபடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் போராட்டம் நடத்துவார்கள் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி