எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்

எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு ஆனால்,
மாணவர்களுக்கு கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன்? இதனால், கணினி அறிவியல் பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது இன்று வரை என்றுவேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட் பயின்ற ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக கொண்டுவந்து புத்தகங்களும ் கோடி கணக்கில் அச்சிடப்பட்டு பின் நிறுத்தப்பட்டது காரணம் எதுவும் இன்றி..

 சென்ற ஆண்டில் புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் : நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்தஅறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்விஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுவும் கூட பொய்த்து போகுமா ? அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார்செய்து நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறைஅதிகாரிகளால் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையும் கூட வெற்று அறிக்கையாக போகுமா? இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா? தமிழ்நாடு பி.எட் கணினி வேலை வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் 28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை இயக்குநர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். புதிய வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்த கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வர நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு. வெ.குமரேசன் ,மாநிலப் பொதுச்செயலாளர் 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட் டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014

11 comments:

  1. 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட அரசு பள்ளிக்கல்வி அமைச்சர்க்கு ஏன் போன மாதம் பாராட்டுவிழா எடுதீங்க.........,

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இலவசமா வகுப்பு எடுக்க தயாரா நீ.,
    அப்படியானால் முதலில் 765 காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பள்ளிகளில் இலவசமாக 11,12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுங்கள் உங்கள் முயற்சியை பார்த்து அரசு தனி பாடமாக கொண்டு வரும். ஒரு 765 நண்பர்கள் கூடவா உங்களுக்கு ஆதரவு தர மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இலவசமாக வகுப்பு எடுப்பதற்கு நான் (நாங்கள் ) தயார் .......
      படித்த படிப்பு யாருக்கும் பயன்படாமல் மதிப்பு இழக்கிறோம்,
      வயதையும் இழக்கின்ற நிலையில் துறவி (இக்காலத்தில் உள்ள துறவிகள் என்று பொருள் அல்ல .துறவி என்றால் முற்றும் துறத்தல் என்று எங்கள் தமிழ் எங்களுக்கு பொருள் உணர்த்தியதைப் போன்று)
      நிலைக்கு வந்து விட்டோம்.
      ஐயா ராசா,
      அப்படியே அரசையும் நோக்கி, சுதந்திரம் பெற்று இத்தனை வருடம் கடந்து அடிப்படைத் தேவையான கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது தானே என்று நீங்கள் கேள்வி கேட்கப் போய்கின்றீர்களோ அன்றுதான் உங்களுக்கும் விடிவு .
      லவசமாக

      Delete
  4. andha veena pona course ah padichutu ipo vandhu kuthuthu kodaiyuthunu sonna enna panna, inga irukura prachanaila tet ku posting podave ila, ungaluku 6 to 10 la cs subject extra pottu enna panna poranga, private matric schools ellam cs proper ah nadathurathe ila, summa scene poda koodathu,


    Neenga nalla thiramaiyana cs degree holders na poi IT company la velai pakkalame,

    ReplyDelete
    Replies
    1. கல்வி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.

      CS என்றால் matricக்கில் போய் படிக்கவும்

      என்று உங்களால் கூற முடிகின்றது என்றால்,
      நாளை உணவு, குடிநீர்,வேலை மற்றும் வாழ்வதா (or) சாவதா போன்ற அனைத்தையும் தனியாரிடம் பெற்றுக் கொள்ளவும் என அரசு உங்களிடம் கூறும் நிலை விரைவில் வரும்.

      Delete
    2. Intha ennathukautha kadavul ungalukum kanna thirakama irukaru.. Enna oru selfish namku oru kannu pona pakathu veetuku 2 kannum poganum apdi patta samoogam tha ithu

      Delete
    3. இது வேற ஒன்றுமில்லை,

      சுயநலப் போக்குதான்........


      "நாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையம் " என்ற

      வார்த்தைகள் மாறி

      "இவ் வையம் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் "
      என்று போதிக்கப்பட்டு வருகிறது
      இந்த சமூகத்தில் ........

      Delete
  5. Posting kidaikkum varai poraduvom csbedvips

    ReplyDelete
  6. Intha aatci mutiyum varai onnum natakathu ithutha unmai

    ReplyDelete
  7. Namma naatu maari araciyal entha st layum illa pichcakari payalha ivanuga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி