பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2018

பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் அச்சம் தீரும் வகையில், பிரதமர் மோடி, நாளை,தேர்வு உரை நிகழ்த்துகிறார். இதை, இணையதளத்தில் பார்க்கவும், கேட்கவும், அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு; தமிழக பள்ளிகளில்சிறப்பு ஏற்பாடு

தீவிர பயிற்சி

நாடு முழுவதும், 10 - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச் முதல், பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு வகை நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக, மாணவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், பொதுத் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எழுத, 'தேர்வு வீரர்கள்' என்ற பொருள்படும் வகையில், 'எக்சாம் வாரியர்ஸ்' என்ற பெயரில், புத்தகம் எழுதி உள்ளார்.இந்த புத்தகத்தை வாங்கி, மாணவர்களுக்கு வழங்க, மத்தியமனிதவள அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.இதை தொடர்ந்து, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அச்சம் தீரவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி, நாளை, டில்லியில், மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

சிறப்பு வசதி

இந்த உரையை நேரடியாக, மத்திய மனிதவள அமைச்சக இணையதளம்மற்றும் பல்வேறு மாநில இணையதளங்களிலும், 'யூ டியூப், வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, மாணவர்களுக்கு ஒளிபரப்ப, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மோடியின் தேர்வு உரை நிகழ்வை பார்க்க, சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வை, அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பார்க்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி