வருங்கால வைப்பு நிதி கையாடல் : தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

வருங்கால வைப்பு நிதி கையாடல் : தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்'

சூளகிரி ஒன்றியத்தில் பணியாற்றிய போது, வருங்கால வைப்பு நிதியில் கையாடல் செய்ததாக, ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கணக்கு சரிபார்ப்புஓசூர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர், பிரேம் ஆனந்த், 58. இவர், சூளகிரி ஒன்றியத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய போது, ஆசிரியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை கையாடல் செய்ததாக புகார் வந்தது.இதையடுத்து, சூளகிரி உதவி தொடக்கக்கல்வி அலுவலராக உள்ள சுதா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜனுக்குதகவல் தெரிவித்தார். அதிகாரிகள் முன்னிலையில் கணக்குகளை சரிபார்த்தனர். ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த, 29 லட்சம் ரூபாயை போலி ஆவணங்கள் தயாரித்து, சூளகிரி உதவி தொடக்கக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் பாலமுரளி என்பவரது வங்கி கணக்கில் செலுத்தியிருப்பதும் தெரிந்தது.

பணி ஓய்வு

இது தொடர்பான விரிவான அறிக்கை, சென்னை தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்புசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பிரேம் ஆனந்த் மற்றும் இளநிலை உதவியாளர் பாலமுரளி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரேம் ஆனந்த், வரும், ஜூன் மாதம் பணி ஓய்வு பெற இருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி