பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்!!!

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளதால் மொபைல்போன்மற்றும் டிவி போன்ற மின்சாதனப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்போன்களுக்கான சுங்க வரி முந்தைய 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டிவி உதிரிப் பாகங்களுக்கான சுங்க வரியும் முந்தைய 7.5 - 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல், டிவி மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மொபைல்போன்களில் சுமார் 81 சதவிகித அளவானது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாக உள்ளது. இந்த அளவு 2018ஆம் ஆண்டில் 90 சதவிகிதத்தைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல்போன்களின் விலையில் உயர்வு இருக்காது.

வீடியோ கேம் சாதனங்களின் சுங்க வரி முந்தைய ஆண்டின் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவு பதப்படுத்துதல், மின்னணு சாதனங்கள், கார் பாகங்கள், காலணி மற்றும் மரச்சாமான்கள் போன்ற பொருள்களுக்கான உள்நாட்டு மதிப்புக் கூட்டுதலும் சிறப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி