இரயில்வே வேலைவாய்ப்பு தமிழிலும் தேர்வு எழுதலாம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2018

இரயில்வே வேலைவாய்ப்பு தமிழிலும் தேர்வு எழுதலாம்!!

இந்திய ரயில்வேயில் 89,409 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்ககளும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்திய ரயில்வேயில் குரூப் சி மற்றும் குரூப் சி ஒன்றாம் நிலை பிரிவுகளில் பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பத்தில் மாற்றம்

சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் ரயில்வே விண்ணப்பங்களில் ரயில்வே அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும் ஐடிஐ சான்றிதழும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். இந்நிலையில் அனைத்து சமூதாயத்தினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் இந்திய ரயில்வே விண்ணப்பங்களை எளிதாக்கியுள்ளது

தமிழ் உள்ளிட்ட 15 மொழிகள்

அதன்படி ரயில்வே தேர்வுக்கான கேள்வித்தால் 15 மொழிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தி, இங்கிலிஷ், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி