மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2018

மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அதன்படி, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்பு, பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, பள்ளிகளில் நடமாடும் நுாலகம் மற்றும் புத்தகக் கண்காட்சி, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு சான்றிதழ் என, பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.அதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு என, பிரத்யேகமாக, சிற்றிதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதில், 6 - 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஓவியம், கட்டுரை, கவிதை என, தங்களின் படைப்பு திறன்களை வெளிப்படுத்தலாம்.இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்கு, பள்ளிக்கல்வித் துறைசமர்ப்பித்து உள்ளது.

2 comments:

  1. இத அப்புறம் பாத்துக்கலாம்.போஸ்டிங் போடுற வேலைய பாருயா.

    ReplyDelete
  2. 20நாள் ஆச்சு இன்னும் கண் துடைப்பு அறிவிப்பு ஏதும் வரலியே?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி