TAX - மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2018

TAX - மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!


டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறு சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம்.



நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது.

மீண்டும், நிலையான கழிவு திட்டம் மீண்டு(ம்) வந்துள்ளது.

நீக்கப்பட்டது

முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.40,000 கிடைக்கும்

ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும். இது குறிப்பாக, மாத சம்பளதாரர்களுக்கு நன்மையளிக்க கூடியது. உதாரணத்திற்கு ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.80 லட்சம் என்றால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை கழித்துவிட்டால் அவரது வருமானம் ரூ.2.40 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துவிடும். அவர் வரியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

இன்னொரு உதாரணம். ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அதுவும் அவருக்கு லாபம் தரும்.

மெடிக்கல் செலவு ஆதாரம்

2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம் (ப்ரூப்) காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக் கொள்ளலாம்.

வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை

மத்திய அரசு பட்ஜெட்டில் மாத வருவாய் பிரிவினருக்கு கிடைத்த ஒரே சலுகை இதுதான். மற்றபடி வருமான வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

1 comment:

  1. enga sambalam ellam tax limit la ye varala boss, nanga enga poi mutikirathu....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி