Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Feb 18, 2018

கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி

கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின் சார்பில் பாலமடை ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, ராதாபுரம் ஒன்றியம் சிலந்திகுளம் நடுநிலைப்பள்ளிகளிலும் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.பாலமடை ஊராட்சி ஓன்றிய பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சியர் சந்தீப் தந்தூரி இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமச்சீர் பாடத்திட்டம் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்று கொடுக்கப்படுகிறது.

இதற்கான மின்சாரம் சோலார் மூலம் கிடைக்கிறது. பாடங்கள் படங்கள் மூலம் நடத்தப்படுவதால் மனதில் எளிதாக பதியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி சில பள்ளிகளில் இருந்தாலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

அதுவும் சோலார் வகுப்பறை இந்தப் பள்ளியில்தான் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த நேரமும் கல்வி கற்பிக்க முடியும். மாணவர்கள் விரும்பிய பாடங்களை மின்சாரம் உபயோகிக்காமல் படிக்கலாம். இதனால் அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 comment :

  1. ஊடக நண்பர்கள் வெறும் செய்திகளை மட்டும் போடாதீர். அமைச்சர் சொல்றத மட்டும் போட நீங்க ஒன்னும் அவர்கள் ஊடகம் அல்ல. பொதுவான நடு நிலை தன்மையுடன் செயல் படுங்கள். உலகதரம்வாய்ந்த கல்வி கல்வினு தம்பட்டம் அடிகிறீங்க அனால் மற்ற மாநிலத்தில் உள்ள அளவு கூட தரமான கல்வியை கொடுக்க வில்லை. ஊடக நண்பர்கள் கேள்வியே கேக்க மாட்டிங்களா? இல்ல கேள்வி கேக்க உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? இல்ல உங்களுக்கு கேள்வி கேக்க தெரியாதா? ஒரு வருடமாக சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளை (செங்கோட்டையன்) அது மாதிரி கூறி வருகிறார். அதையும் வேறு செய்தி கிடைக்காத மாதிரி நீங்களும் தினம் தினம் தயவு செய்து விளம்பரம் செய்ய வெண்டாம். இனியாவது மக்கள் கேக்க நினைக்கும் கேள்விகளை அமைச்சர்களை பார்த்து கேளுங்கள். அடுத்த முறை கல்வி அமைச்சரை சந்திக்கும் ஊடக நண்பர்கள் கணினி பாடத்தை நடமுறை படுத்த சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மேலாக புதிய பாடதிட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன அனால் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என cm cell,SCERT க்கே தேரியவில்லை. அரசு கொள்கை முடிவுனு ஒரு அல்ப காரணம் சொல்லுவாங்க பாருங்க...,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி