Flash News :நீட் தேர்வு - வயது வரம்பு நிர்ணயத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2018

Flash News :நீட் தேர்வு - வயது வரம்பு நிர்ணயத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது வரம்பு 17-ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25-ஆகவும் உள்ளது.
அதேபோல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான வயது வரம்பு 30-ஆக நிர்ணயிக்கப்பட்டது. மே 6-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 25-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை மாற்றி அமைக்கக் கோரி  மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சிபிஎஸ்இ நிர்ணயிக்கும் வயது வரம்பில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆனால் மனுதாரர்கள் தங்கள் மாநிலத்திற்குட்பட்ட உயர்நீதிமன்றங்களை அணுகலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வயது உச்சவரம்பிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி