உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2018

உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.

(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும்? மற் றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமா?என்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் உயர்கல்வி துறை வழங்கிய பதில்கள்.

கோரிய விவரங்கள்:
(i) பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) சுற்றறிக்கை அறிவிப்பு எண்: No.F.1-2/2016(PS/Amendment) நாள்: 11th July, 2016 படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் படி ஜூலை 11, 2009 க்கு அடுத்து முனைவர் பட்டம் (Ph.D) பயில பதிவு செய்தவர்கள் கட்டாயமாக தேசிய அல்லது மாநில அளவிலான உதவி பேராசிரியருக்கான தகுதி (நெட்/செட்) தேர்வினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது முனைவர் பட்டம் பெற்றாலும் நெட்/செட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறவேண்டும் அல்லது முதுகலை பட்ட படிப்பு (M.A/M.Sc/M.Com) உடன் நெட்/செட் தகுதி இருந்தால் போதும் என்று யுஜிசி (UGC) கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணி நியமணம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது தமிழகத்தில் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? அல்லது எப்பொழுது கட்டாயமாக்கப்படும்? ஒரு சமயம் தாங்கள் இந்த தகவலை தெரிவிக்க இயலாது என்றால், யாரிடம் இதனை கேட்பது.
(ii) பல்கலைக்கழக மானிய குழுவானது முழு நேரம் முறையில் (Full-Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் (Research Experience) நாட்களை கற்பித்தல் அனுபவமாக (Teaching Experience) கருத்தில் கொள்கிறது. இந்த நடைமுறை தமிழகத்திலும் உள்ளதா? இந்த கணக்கீடானது உதவி பேராசிரியர் (Assistant Professor) நேர்காணலின் போது பொருந்துமா அல்லது இணை பேராசிரியர் (Associate Professor) நேர்காணலின் போது பொருந்துமா?
கடித எண் 19648/எப்.2/2017-1 நாள் 13.12.2017 வாயிலாக பெறப்பட்ட பதில்கள் 
(i) அரசு கடித எண்.13792/எப்.2/2017-10 நாள். 13.01.2017 -ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் தெரிவு செய்வது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உரிய அறிவுறுத்துங்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ii) முழு நேரமுறையில் (Full Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக எடுத்துக் கொள்வது குறித்து தமிழக அரசால் தனியே ஆணைகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

14 comments:

  1. epdi irundhalum 30 lacks irundha than poga mudium

    ReplyDelete
  2. தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்பை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ யுஜிசி விதிமுறை 2009 ரெகுலேஷன்ஸ் படி முடிப்பவர்கள் எவரும் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. யுஜிசி ரெகுலேஷன்ஸ் 2009 படி முடிக்காதவர்கள் கண்டிப்பாக நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 100% correct. After 2009 ph.D reg candidates followed ugc regulation. You are expected SET & NET. correct ah regulation ah padiga

      Delete
    2. 100% correct. After 2009 ph.D reg candidates followed ugc regulation. You are expected SET & NET. correct ah regulation ah padiga

      Delete
  3. no need of having NET/SET now a days, Ph.D is enough......

    ReplyDelete
  4. Yes correct.
    1. SET or NET or PH.D. plus
    2. 30 Lakhs.

    ReplyDelete
  5. சென்ற ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம மூலம் 1883 அரசு கலைகல்ல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனம் சார்பாக அறிவிப்பு வரவேண்டிய நிலையில் இது வரை அந்த அறிவிப்பு சம்பந்த்தமாக எந்த தகவலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. உயர் கல்வி அமைச்சரும் இதை பற்றி வாய் திறக்கவில்லை. தமிழக உயர் கல்வி செயலாளரும் இந்த அறிவிப்பு எப்பொழுது வரும் என்று எந்த தகவலையும் கூறவில்லை. தமிழக எதிர் கட்சிகளும் இந்த நியமனம் பற்றி கேள்வி எழுப்ப முன்வரவில்லை. இந்த அறிவிப்பு எப்பொழுது வரும் என்று காத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் தான். இதற்கிடையே தமிழக பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நியமனத்தில் ஊழல் அரசு உதவி பெரும் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர் நியமனத்தில் ஊழல். பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துவார்களா என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் உள்ளது. செட் தேர்விலும் பணம் பெற்று கொண்டு தகுதி இல்லாதவர் தேர்ச்சி பெற வைக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உண்மையாக கடின பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவகர்கள் தான். ஆராய்ச்சி படிப்பிலும் பணம் கொடுத்து குறுகிய காலத்தில் முனைவர் பட்டம் பெறுகின்றனர். மொத்தத்தில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் ஊழலில் முதல் இடத்தில உள்ளது. நமது அண்டை மாநிலங்கள் கல்வியின் தரத்தில் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறது. மற்ற மாநிலத்தவர் அணைத்து துறைகளிலும் முன்னணியில் செல்கிறார்கள். தமிழகமே அரசியல் வாதிகளின் கையில் சிக்கி தவிக்கிறது. நம் தமிழ் நாட்டின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் வைத்து இனிமேலாவது அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் செயல்படுவார்களா!!!!!!!!

    ReplyDelete
  6. தமிழ் நாட்டில் 2015 முதல் 2017 வரை அணைத்து பல்கலைகழகத்திலும் மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரியுளும் நடை பெற்ற உதவி பேராசிரியர் நியமனத்தில் ஊழல் உண்மையே. நியமனம் பெற்ற அனைவரையும் விசாரணை செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வெளிவரும். தகுதி வாய்ந்த நபர்கள் வெளியிலும் 30 லட்சம் கொடுப்பவர்கள் உதவி பேராசிரியர் பொறுப்பிலும் உள்ளார்கள். இதன் விளைவு இன்னும் 5 ஆண்டுக்கு பிறகு நம் தமிழ் நாட்டின் உயர் கல்வியின் தரத்தில் தெரிய வரும். இந்த பெரும் ஊழலில் தமிழக அமைச்சர் , கல்லூரியின் முதல்வர் , காலேஜ் செகிரேட்டரி அண்ட் கரெஸ்பாண்டண்ட் இவர்கள் அனைவவருக்கும் தொடர்பு உண்டு. தமிழ் நாட்டில் செட் நுழைவு தேர்விலும் ஊழல் நடை பெறுகிறது.

    ReplyDelete
  7. PhD முடிப்பதிலும் ஊழல் நடக்கிறது
    பணம் இருந்தால் phd கிடைக்கும் நிலைமை தமிழகத்தில் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. பணம் கொடுப்பது நமது தவறு..அனைவரையும் எப்படி சொல்ல முடியும்..

      Delete
  8. Any news regarding trb notification for government Arts and science colleges this year year around ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி