TNPSC - 'குரூப் - 4' தேர்வில் 17.53 லட்சம் பேர் 10 முதல் இன்ஜி., படித்தவர் வரை போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

TNPSC - 'குரூப் - 4' தேர்வில் 17.53 லட்சம் பேர் 10 முதல் இன்ஜி., படித்தவர் வரை போட்டி

அரசு பணிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்புவதற்காக, நேற்று நடந்த, 'குரூப் - 4' தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 4 தேர்வு, நேற்றுநடந்தது.
கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ., பதவிக்கு,இதுவரை தனியாகத் தான் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை, குரூப் - 4 தேர்வில், முதன்முதலாக, வி.ஏ.ஓ., பணியில், 494 காலி இடங்களும் சேர்க்கப்பட்டன. மேலும், இளநிலை உதவியாளர், 4,301; தட்டச்சர், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தத் தேர்வு நடந்தது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையிலான இத்தேர்வு, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. மொத்தம், 6,962 தேர்வு மையங்களில், 20 லட்சத்து, 69 ஆயிரத்து, 274 பேர் தேர்வு எழுதும் வகையில், ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதில், 11.27 லட்சம் பேர் பெண்கள்; 54 திருநங்கையர்; 25 ஆயிரத்து, 906 மாற்றுத்திறனாளிகள்; 7,367 கணவனை இழந்த பெண்கள், 4,107 முன்னாள் படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், தேர்வில், 17.53 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்; 3.16 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை.தேர்வு கண்காணிப்பு பணியில், 1.03 லட்சம் பேர் ஈடுபட்டனர்; 1,165 மொபைல் கண்காணிப்பு குழுக்கள், 685 பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 170 மையங்களில், கேமரா பொருத்தப்பட்டு, ஆன்லைனில் கண்காணிக்கப்பட்டது. இதுவரை நடந்த, எந்த தேர்விலும் இல்லாத அளவில், ஒரு போட்டி தேர்வுக்கு, 21 லட்சம் பேர் விண்ணப்பித்து, அதில், 17 லட்சத்து, 52 ஆயிரத்து, 882 பேர் பங்கேற்றதும், தேர்வு அமைதியாக முடிந்ததும் சாதனையாக கருதப்படுகிறது.

புது வசதி அறிமுகம் :

குரூப் - 4 தேர்வில் புதிய வசதியாக, தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகியவை, தேர்வர்களின் விடைத்தாளில் அச்சிடப்பட்டிருந்தன. மேலும், தேர்வில் பதில் அளிக்காமல் விடுபடும் வினாக்களின் கட்டங்களை கணக்கிட்டு, தேர்வரே எழுத வேண்டும் என்ற, புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.

2 comments:

  1. தினகரன்

    முகப்பு >செய்திகள் >சென்னை

    ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு : டிடிவி.தினகரன் கண்டனம்



    2018-02-12@ 00:32:30



    சென்னை: ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:  2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் 94,000 பேருக்கு இது மிகுந்த அச்சத்தை ஏற்பத்தியுள்ளது. இதை அரசு மிகுந்த அலட்சியத்தோடு கையாளுகிறது. மேலும், 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. 

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    TTV bats for teacher candidates who cleared TET

    TNN | Updated: Feb 12, 2018, 00:41 IST

    Coimbatore: RK Nagar MLA TTV Dhinakaran on Sunday condemned the state government for not according priority to the candidates, who have cleared the Teacher Eligibility Test (TET) held in 2013 in the appointments to government schools.

    In a statement issued on Sunday, Dhinakaran alleged that 94,000 candidates, who cleared the exam in 2013, were not considered for appointments to government schools in spite of the fact that the validity of the test was only for seven years.

    ReplyDelete
  2. appo avaraye posting poda sollunga ji

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி