சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு கடினம்: இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் கோரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2018

சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு கடினம்: இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் கோரிக்கை!!!

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடந்த இயற்பியல் பொதுத்தேர்வு கடினமாகஇருந்ததாக கூறப்படுகிறது.இந்தியா முழுவதும் 12-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 7-ந் தேதி இயற்பியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.குறிப்பாக வினாத்தாளில் ‘சி‘ பிரிவில் இடம்பெற்று இருந்த 3 மதிப்பெண் கேள்விகளுக்கு யோசித்து பதில் அளிக்கும் வகையில் கடினமாக இருந்தது. மேலும், கடந்த 5-ந் தேதி ஆங்கில தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, இயற்பியல் தேர்வுக்கு முறையாக தயாராவதற்கு விடுமுறைஅளிக்கப்படவில்லை. ஒருநாள் விடுமுறைக்கு பின்னர் மாணவ-மாணவிகள் இயற்பியல் தேர்வு எழுதினார்கள்.

கருணை அடிப்படையில்...

இந்த நிலையில், சி.பி.எஸ்.சி. மாணவ-மாணவிகள் தங்களுக்கான இயற்பியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததை வெளிப்படுத்தும் வகையிலும், இயற்பியல் விடைத்தாளை ஆசிரியர், ஆசிரியைகள் கருணை அடிப்படையில் திருத்த வேண்டும் எனவும், கடந்த முறை பின்பற்றிய மிதமான திருத்தம் முறையை அவர்கள் இந்த ஆண்டும் கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை அவர்கள் ch-a-n-ge.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த இணையதளத்தில் இதுவரை மொத்தம் 81 ஆயிரத்து 501 பேர்சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

1 comment:

  1. பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    பதிவு: ஜூலை 02, 2017 11:20

    மாற்றம்: ஜூலை 02, 2017 11:21

    பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி (அரக்கோணம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். கல்வியில் செய்துள்ள மாற்றத்தால் அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகும் நிலை வரும் காலங்களில் ஏற்படும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வித்துறையில் செய்துள்ள மாற்றத்தால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு வருடம் ஓடி விட்டது ஆனால் இன்னும் எந்த ஒரு பி.எட் கணினி பட்டதாரிக்கும் அரசு வேலை வழங்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி